அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு இன்று நடைபெற்றது. இந்த செயற்குழுவில்மொத்தம் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் பின்வருமாறு,
1. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளைத் தொடர்ந்து நிலை நாட்டி, கழகத்தை உன்னத நிலைக்கு அழைத்துச் செல்லும் கழக பொதுச்செயலாளர் அவர்களுக்கு நன்றி!
2. கழக பொருளாளர் நியமனத்திற்கு ஒப்புதல்
3. கழக பொதுச்செயலாளர், கழக தலைவர் மற்றும் கழக துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்கான தேர்தலை நடத்திட தேர்தல் அதிகாரிகள் நியமனம்
4. கழக பொதுச்செயலாளர், கழக தலைவர் மற்றும் கழக துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை தற்போது கழக பொதுச்செயலாளர், கழக துணைத்தலைவர் பொறுப்புகளில் உள்ளவர்களே தொடர்ந்து செயலாற்றிட இச்செயற்குழு ஒப்புதல் வழங்குகிறது.
5. கழக பொதுக்குழுவைக் கூட்டிட கழக பொதுச்செயலாளர் அவர்களை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
6. விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தை வஞ்சித்து வரும் விடியா தி.மு.க அரசிற்கு கண்டனம்.
7. கொலை, கொள்ளை, தீண்டாமை, போதைப் பொருட்களின் தாரளப் புழக்கம், பெருகிவரும் கள்ளச்சாராய சாவுகள் என சட்ட ஒழுங்கு பராமரிப்பில் தோல்வியடைந்த தி.மு.க அரசிற்கு கண்டனம்.
8. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை, சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறைக்கவும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும் மத்திய அரசை வலியுறுத்தல்.
9. ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகள் முடிவடைந்த நிலையில், அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கும் வகையில் சொத்து வரி, மின் கட்டண உயர்வு, பால் பொருட்களின் விலை உயர்வு என சாமானிய பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் பொருளாதாரச் சுமையை ஏற்றி, வஞ்சிக்கிறது தி.மு.க அரசு.
மேலும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க இயலாமை, நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகள், துறைகள்தோறும் பெருகும் ஊழல் குற்றச்சாட்டுகள், தொடரும் அமைச்சர்களின் ஆணவப்பேச்சு, தலைதூக்கும் தீண்டாமை எனும் பெருங்கொடுமை என தி.மு.க ஆட்சியில் நடைபெறும் இந்த அவலங்களையெல்லாம் மக்கள் மன்றத்தில் எடுத்துரைக்கும் வகையில் அனைத்து கழக மாவட்டங்களிலும், பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொடர்ச்சியாக நடத்துவது என அமமுக செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.