Adipurush – ஆபத்தில் ஆதிபுருஷ் வசனகர்த்தா.. வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

சென்னை: Adipurush (ஆதிபுருஷ்) ஆதிபுருஷ் படத்தின் வசனகர்த்தா மனோஜ் முண்டாஷிர் வீட்டுக்கு காவல் துறையினர் பாதுகாப்பு அளித்திருக்கின்றனர்.

பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கியிருக்கும் படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை இந்தக் கால தலைமுறையினர் புரிந்துகொள்ளும் விதமாக அதனை அடிப்படையாக வைத்து படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சீதையாக கீர்த்தி சனோனி, ராவணனாக சைஃப் அலிகான் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஹிந்தி, தமிழ்,மலையாளம், கன்னடம், தெலுங்கு என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

அலப்பறை கூட்டிய ஆதிபுருஷ்: படம் வெளியாவதற்கு முன்னதாக படக்குழு அறிவித்திருந்தபடி திரையரங்குகளில் அனுமனுக்கென்று ஒரு இருக்கை ஒதுக்கப்பட்டது. ஒரு திரையரங்கில் துண்டு போட்டது, இன்னொரு திரையரங்கில் அந்த சீட்டுக்கென்று பூஜை செய்தது, மற்றொரு திரையரங்கில் குரங்கு வந்தது, மற்றுமொரு திரையரங்கில் ஆதிபுருஷ் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனம் சொன்னதால் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியது என 16ஆம் தேதி ஆதிபுருஷ் அலப்பறை கொஞ்சம் ஓவராகவே இருந்தது.

நெகட்டிவ் விமர்சனம்: இப்படி பல அலப்பறைகளை கூட்டிய ஆதிபுருஷுக்கு ரசிகர்களோ கலவையான விமர்சனத்தையே கொடுத்திருக்கின்றனர். குறிப்பாக படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளை கிழித்து தொங்கவிட்டனர். இதற்காகவா 600 கோடி ரூபாய் பட்ஜெட்டை போட்டீர்கள் இதற்கு சோட்டா பீம் கார்ட்டூன் கிராஃபிக்ஸே தேவலாம் என சமூக வலைதளங்களில்கூறினர். அதேசமயம் பின்னணி இசையை பாராட்டவும் அவர்கள் தவறவில்லை.

பாக்ஸ் ஆபிஸ்: இப்படி படு மொக்கையாக விமர்சனம் வந்ததன் காரணமாக படத்தின் வசூல் பாதிக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் படம் வெளியான இரண்டு நாட்களில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துவிட்டதாக கூறிய படக்குழு தற்போது 350 கோடி ரூபாய்வரை படம் வசூலை வாரிக்குவித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ஆதிபுருஷ் ரசிகர்கள் கொஞ்சம் அமைதியாகியிருக்கின்றனர்

Mumbai police gav police protection to adipurush dialogue writers house

சர்ச்சை: ஒருபக்கம் விமர்சனத்தில் அடி, வசூலில் அடி என இரண்டு பக்க மத்தளமாக அடிவாங்கிக்கொண்டிருந்த ஆதிபுருஷை சுற்றி இன்னொரு சர்ச்சை எழுந்தது. அதாவது படத்தில் சீதை பாரதத்தின் புதல்வி என்ற வசனத்துக்கு நேபாளம் எதிர்ப்பு தெரிவித்து படத்தை தடை செய்ய; மற்றொரு பக்கம் ராவணன் பற்றி அனுமன் பேசும் வசனத்துக்கு இந்தியாவுக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்தது. சூழல் இப்படி இருக்க அனுமன் ராவணன் வசனத்தை மாற்றியமைப்பதாக படக்குழு அறிவித்தது.

வசனகர்த்தா வீட்டுக்கு பாதுகாப்பு: இந்நிலையில் படத்தின் வசனகர்த்தாவான் மனோஜ் முண்டாஷிர் தனக்கு அடையாளம் தெரியாந்த நபர்களிடமிருந்து கொலை மிரட்டல் வந்துகொண்டிருக்கிறது. எனவே தன்னுடைய உயிருக்கு ஆபத்து இர்ப்பதாக காவல் துறையில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் அவரது வீட்டுக்கு மும்பை காவல் துறையினர் பாதுகாப்பை அளித்துள்ளனர்.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து மனோஜ் அளித்திருந்த விளக்கத்தில், “எனது சொந்த சகோதரர்கள் சமூக வலைதளங்களில் எனக்கெதிராக அநாகரீகமான வார்த்தைகளை எழுதினர். என் தாயைப் பற்றி அவதூறாக எழுதினார்கள்.ஒவ்வொரு தாயையும் தனது தாயாகக் கருதும் ஸ்ரீ ராமரை மறந்து இப்படி பேசும் அளவுக்கு என் சகோதரர்களுக்கு எங்கே திடீரென்று மனக்கசப்பு ஏற்பட்டது” என குறிப்பிட்டிருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.