‛ஏய் இந்தாம்மா!' பிரியதர்ஷினியின் புகைப்படங்களுக்கு ரசிகர் போட்ட கமெண்ட்ட பாருங்க
சின்னத்திரை நடிகை பிரியதர்ஷினி எதிர்நீச்சல் தொடரில் ரேணுகா கதாபாத்திரத்தில் கம்பேக் கொடுத்துள்ளார். குடும்ப பாங்கான மதுரை பெண்ணாக எதார்த்தமாக பேசி நடிக்கும் அவரது கதாபாத்திரம் பலரையும் கவர்ந்துள்ளது. இதன்மூலம் சோசியல் மீடியாவில் அவருக்கான ரசிகர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அண்மையில் மாலத்தீவிற்கு ஜாலியாக சுற்றுலா சென்றுள்ள பிரியதர்ஷினி குட்டையான ஷார்ட்ஸ், சர்ட் அணிந்து படு மாடர்னாக புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதை பார்த்த ரசிகர் ஒருவர் ‛ஏய் இந்தம்மா! என்னடா ஞானம் உன் பொண்டாட்டி இப்படி இருக்கா?' என ஆதிகுணசேகரன் ஸ்டைலில் கமெண்ட் அடித்து கலாய்த்துள்ளார்.