திருமணமான பெண் தனக்கு விருப்பமானவருடன் வாழலாம்.. நீதிமன்ற உத்தரவால் கணவர் அதிர்ச்சி!

டேராடூன்: திருமணமான பெண் தனக்கு விருப்பமான காதலனுடனேயே நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதால் கணவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் ஜிம் பயிற்சியாளர். இவருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

ஜிம் பயிற்சியாளரின் மனைவி ஹரியானா மாநிலம் ஃபரீதாபாத்தை சேர்ந்த ஒருவருடன் சமூகவலைதளங்களில் பழகியுள்ளார். நாளடைவில் இவர்களுக்கு பழக்கம் மெல்ல மெல்ல காதலாக மாறிவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கள்ளக்காதலன் மீது இருந்த மோகம் காரணமாக அந்த பெண் , கணவர், இரு குழந்தைகளை விட்டு விட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

இதைத் தொடர்ந்து ஜிம் பயிற்சியாளர் மாநில உயர்நீதிமன்றத்தை நாடினார். அங்கு தனது மனைவி வேறொருவருடன் வாழ்ந்து வருவதாகவும் தனது மனைவி சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். நீதிபதிகள் அந்த பெண்ணை மே 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு போலீஸ் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டனர்.

தனது கணவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதால் இனி அவருடன் வாழ விரும்பவில்லை. இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பங்கஜ் புரோகித், மனோஜ் திவாரி ஆகியோர் அடங்கிய அமர்வு இருதரப்பு கருத்துகளையும் கேட்டறிந்து ஜிம் பயிற்சியாளரின் மனைவிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.

தனது விருப்பத்தின் பேரிலேயே அந்த பெண் வேறு ஒருவருடன் சேர்ந்து வாழ்கிறார். மேலும் இந்த தீர்ப்புக்கு ஜிம் பயிற்சியாளரின் வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்தார். இது போன்ற தீர்ப்புகள் திருமண சட்டத்திற்கு ஆபத்தாக மாறிவிடும் என்றும் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம் என வழக்கறிஞர் தெரிவித்தார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.