உலகிலேயே முதன்முறையாக, மாடல் வாரியாக கார்கள் வெளியேற்றும் கார்பன் அளவை சீன அரசு வெளியிட்டுள்ளது.
வாகனங்கள் வெளியிடும் கார்பனால் சுற்றுச்சூழல் மாசடைவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட சீன அரசு, ஆயிரத்து 400 மாடல் கார்கள் அவற்றின் ஆயுட்காலம் முழுவதும் வெளியேற்றும் கார்பன் அளவை கணக்கிட்டு இணையத்தில் வெளியிட்டுள்ளது.
சராசரியாக, ஒரு கார் ஒரு கிலோமீட்டர் தொலைவு பயணிக்க 260 கிராம் கார்பன் டைஆக்சைடு வெளியிடுவதும், அதிலும் குறிப்பாக டீசல் கார்கள் அதிகளவு கார்பனை வெளியேற்றுவதும் சீன அரசு வெளியிட்ட கணக்கீட்டில் தெரியவந்துள்ளது.