இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேர் படகுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். படகு பழுதாகியதால் காற்றின் வேகம் காரணமாக நெடுந்தேவு அருகே படகு தரைதட்டி நின்றதாக கூறப்பட்டது.
மேலும் எஞ்சின் பழுது காரணமாக படகு ஒதுங்கியதால் மீனவர்களை விடுவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு இலங்கை கடற்படை அழைத்து சென்றதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் படகுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில் மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை விசாரித்ததில் படகு பழுதானது தெரியவந்தது.
இதனை அடுத்து மனிதாபிமான அடிப்படையில் படகை இலங்கை கடற்படை பழுது நீக்கு 9 மீனவர்களையும் விடுவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.