கிழக்கு மாகாணத்தில் உரப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஆளுநர் செந்தில் தொண்டமான் அதற்கான தீர்வைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.
இதற்கமைய, கிழக்கு மாகாணத்தில் உள்ள விவசாயிகள் எதிர்கொண்டுள்ள உரப் பற்றாக்குறை தொடர்பாக, ஆளுநர் செந்தில் தொண்டமான், விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அந்த கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு மாகாணத்தில் உரப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தின், மூன்று மாவட்டங்களின் மக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, ஆளுநர் செந்தில் தொண்டமான் குறிப்பிட்ட பிரச்சினையினையை விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரன் கவனத்துக்கு கொண்டு சென்றதுடன், தீர்வினையும் பெற்றுக்கொடுத்துள்ளார்.
அதன் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் உரப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு போதிய உரத்தை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை கமத்தொழில் அமைச்சு ஆரம்பித்துள்ளது. இதனடிப்படையில் பல காலமாக நிலுவையில் இருந்த உரப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.