11ம் வகுப்பு பொதுத்தேர்வு மறு கூட்டல் முடிவுகள் நாளை வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த நிலையில் தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டது.
இதனையடுத்து மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பிற்கு விண்ணப்பிக்க காலாபகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நாளை மதியம் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் வெளியிடப்படும் எனவும், இந்த பட்டியலில் பதிவு எண்கள் இடம்பெறாத விடைத்தாள்கள் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.