வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிட சுற்றுலா சென்ற நீர்முழ்கி கப்பல் மாயமான சம்பவத்தில் நீர்மூழ்கி கப்பலில் பயணித்தது 5 தொழிலதிபர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி நள்ளிரவில் 2200 பேருடன் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த டைட்டானிக் எனும் சொகுசு கப்பல் அட்லாண்டிக் கடலில் பனிமலையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 1600 பேர் பலியாயினர். உலக முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுச் சம்பவங்களில் டைட்டானிக் கப்பல் கடலில் முழ்கிய சம்பவம் ஒன்று .
பலகட்ட ஆராய்ச்சிக்கு பின் 1985-ம் ஆண்டு வடக்கு அட்லாண்டிக் பகுதியிலிருந்து 400 மைல் தென்கிழக்கே நியூபவுன்ட்லாண்ட் தீவு அருகே கடலுக்கு அடியில் 4 கி.மீ ஆழத்தில் சிதைந்து போயிருந்த கப்பலின் முன்பாகம் கண்டறியப்பட்டது.
இந்நிலையில் கப்பல் மூழ்கிய இடத்தை பார்வையிட நீர்மூழ்கி கப்பல் மூலம் சென்றவர்கள் 5 தொழிலதிபர்கள் எனவும் அவர்கள் குறித்து விவரம் தெரியவந்துள்ளது. அவர்களில் பிரிட்டன் தொழிலதிபர் 1) ஹமீஸ் ஹார்டின், 2) ‘ஸ்டாக்டோன் ரஷ், 3) பாகிஸ்தானைச் சேர்ந்த ஷாஷதா தாவூத், இவரது மகன் 4)சுலைமான், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 5) பவுல் ஹென்றி நெர்ஜியோலட் ஆகிய 5 தொழிலதிபர்கள் என தெரியவந்தது. நீர்மூழ்கி கப்பலை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement