வாஷிங்டன்:
கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை காண்பதற்காக சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் மாயமாகிய சம்பவம் உலகையே அதிரச் செய்துள்ளது. இதனிடையே, இந்த நீர்மூழ்கிக் கப்பல் மீட்கப்படுமா, ஆழ்கடலில் ஏதேனும் மர்மமான விஷயம் நடந்திருக்குமா என்பது குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
பிரிட்டனின் சவுத் ஆம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு 1912-ம் ஆண்டு தனது முதல் பயணத்தை தொடங்கியது டைட்டானிக். அந்தக் காலக்கட்டத்தில் மிக பிரம்மாண்டமான சொகுசு கப்பலாக இது கருதப்பட்டது. 2,224 பேருடன் சென்ற டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு பனிப்பாறையில் மோதி மூழ்கியது. இதில் 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
டைட்டானிக் கப்பல் மூழ்கிய போதிலும், இதுதொடர்பாக பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்தன. இதில் 1985-ம் ஆண்டுதான் டைட்டானிக் கப்பலின் சில சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, மீண்டும் டைட்டானிக் கப்பல் தொடர்பான ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டன. இதில், பல ஆயிரம் அடி ஆழத்தில் மூழ்கியிருந்த டைட்டானிக் கப்பல் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த கப்பலை பார்வையிடுவதற்காக அதிநவீன நீர் மூழ்கிக் கப்பலில் சுற்றுலா பயணிகள் 5 பேர் சென்றனர். ஒருவர் தலா ரூ.2 கோடி கொடுத்து இந்த பயணத்தை மேற்கொண்டனர்.
இந்நிலையில், பயணம் தொடங்கிய ஒரு மணிநேரம் 45 நிமிடங்களில் இந்த நீர்மூழ்கி கப்பலுக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் இடையேயான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த கப்பல் எங்கு சென்றது, அதில் உள்ளவர்களின் நிலை என்ன என எந்த விவரங்களும் தெரியவில்லை. இருந்தபோதிலும், 96 மணிநேரம் நீர்மூழ்கி கப்பலுக்குள் ஆக்சிஜன் இருக்கும் எனக் கூறப்படுகிறது. தற்போது அதில் வெறும் 60 மணிநேரம்தான் மீதம் உள்ளது. அதற்குள்ளாக அந்த கப்பலை கண்டுபிடிக்காவிட்டால் அதில் பயணிப்பவர்கள் மரணம் அடைவது நிச்சயம்.
எந்த கிழமையில் ஹார்ட் அட்டாக் வரும் தெரியுமா? அலற வைக்கும் ஆராய்ச்சி ரிப்போர்ட்.. காரணத்தை பாருங்க
இதன் காரணமாக, அமெரிக்கா, கனடா நாடுகள் இணைந்து நீர் மூழ்கிக் கப்பல்களை கொண்டு மாயமான நீர்மூழ்கிக் கப்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, இந்த நீர்மூழ்கிக் கப்பலில் அதிநவீன வசதிகள் செய்யப்பட்டதால் இதன் தொடர்பு அறுந்துபோக வாய்ப்பே இல்லை என அதனை வடிவமைத்த நிறுவனம் கூறியுள்ளது. ஆழ்கடலில் மிகப்பெரிய ராட்சத மீன் ஏதாவது தாக்கி இருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் மர்மமான விஷயம் நடந்திருந்தால் மட்டுமே அந்த நீர்மூழ்கி கப்பல் வழிதவறி சென்று மாயமாவதற்கு வாய்ப்புகள் உள்ளன எனவும் கூறப்படுகிறது.