தமிழ் சினிமாவில் கரகாட்டக்காரன், அதிசய பிறவி, கும்பக்கரை தங்கய்யா, தாலாட்டு கேக்குதம்மா, சாமுண்டி, சக்கரை தேவன், கோயில் காளை, விரலுக்கேத்த வீக்கம் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார் கனகா. மறைந்த பழம்பெரும் நடிகையான இவர் குறித்து இயக்குனர் கங்கை அமரன் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
கடந்த 1989 ஆண் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான ‘கரகாட்டக்காரன்’ படம் வெளியாகி வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. இந்தப்படத்தில் பணியாற்றிய அனைவரும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. இந்தப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களால் கரக்காட்டக்காரன் கனகா என்று அழைக்கப்பட்டார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் அப்பாவுடன் ஏற்பட்ட சொத்து பிரச்சனை காரணமாக வீட்டிலே முடங்கி கிடந்தார் கனகா. வீட்டை விட்டு வெளியே வராமல் தனிமையிலே இருந்து வந்தார். அண்மையில் சில மாதங்களுக்கு முன்பாக கனகா வீட்டிலிருந்து அதிகப்படியான புகை வெளியேறுவதாக அக்கம் பக்கத்தினர் புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்தவர்களை கனகா உள்ளேயும் அனுமதிக்கவில்லை.
பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது அவரது வீடு பாழடைந்த நிலையில் இருந்துள்ளது. ரொம்ப நாட்களுக்கு பிறகு கனகாவை அன்று தான் அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர். இந்நிலையில் தற்போதைய பேட்டி ஒன்றில் கனகா குறித்து கங்கை அமரன் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Maamannan: திட்டமிட்டபடி ‘மாமன்னன்’ வெளியாகுமா.?: படத்துக்கு தடை கோரி பரபரப்பு மனு.!
அதில், ‘கரகாட்டக்காரன்’ படத்தில் கனகாவை அறிமுகப்படுத்தினேன். ரொம்ப நல்ல பொண்ணு. கனகாவுடைய நிலைமையை கேள்விப்பட்டு அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர் எடுக்கவில்லை. அதன்பிறகு ‘உன்ன மறந்திருக்க ஒரு பொழுதும் அறியேன் யம்மா’ என்ற பாடல் வரிகளை பாடி ‘நான்தான் கங்கை அமரன் பேசுகிறேன். போன் பண்ணும்மா’ என வாய்ஸ் மெசேஜ் அனுப்பினேன். ஆனால் கனகா போன் பண்ணவில்லை. அவர் வாழ்க்கையில் ஏதோ சம்பவம் நடந்திருக்கிறது.
இதனால் தனிமையிலே இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு கனகா வந்துள்ளார். அவரை பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. வீட்டிற்கே சென்று பார்க்க முயன்றும் பார்க்க முடியவில்லை. கனகா சாப்பாட்டுக்கு என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. அவர் மனதை எப்படியாவது மாற்றி, எனது வீட்டுக்கு அழைத்து வந்து நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் ஆசை இருக்கிறது என்று வேதனையுடன் கனகா பற்றி பேசியுள்ளார் கங்கை அமரன்.
Ram Charan: திருமணமாகி 11 ஆண்டுகள் பின் அப்பாவான ராம் சரண்: குவியும் வாழ்த்துக்கள்.!