வாஷிங்டன் டிசி: பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க வருகையின் முக்கிய நோக்கம் அமெரிக்கா மற்றும் இந்தியா இரு நாடுகளின் உறவை வலுப்படுத்துதல் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துதலை நோக்கமாக கொண்டது. இதைத்தவிர சீனா மற்றும் ரஷ்யாவை பற்றியது இல்லை என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.
மேலும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஓருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி கூறியதாவது:
நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம் ரஷ்யா, சீனாவை பற்றியது இல்லை. இந்தியாவுடன் எங்களது இருதரப்பு உறவை மேம்படுத்த விரும்புகிறோம். இதைத் தவிர இந்திய அரசை வேறு ஏதாவது செய்வதற்கு வற்புறுத்துவதற்கு அல்ல. உலக அரங்கில் இந்தியா மிகப்பெரிய சக்தியாக வளர்வதை அமெரிக்கா ஆதரிக்கிறது. பாதுகாப்பு விசயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் அதற்கான வாய்ப்புகளை கண்டறியவும் அமெரிக்கா விரும்புகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் வருகை சுதந்திரமான, வளமான மற்றும் பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பகுதிகளுக்கான ஒத்துழைப்பு மற்றும் அதன் எதிர்காலம் தொடர்பான ஒப்பந்தங்களை வலுப்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம்.
ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியா வழங்கிய மனிதாபிமான உதவிகள் வரவேற்கத்தக்கது. ரஷ்யா-உக்ரைன் போரில் பிரதமர் நரேந்திய மோடி ஒரு உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். போர் குறித்த எந்வொரு மூன்றாம் தரப்பின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை நாங்கள் வரவேற்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement