அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவர்களின் போன் மூலம் தனது பினாமிகளிடம் பேசியதாக பகீர் கிளப்பியுள்ளார் சவுக்கு ஷங்கர்.
செந்தில் பாலாஜிஅமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 13ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து உடனடியாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் செந்தில் பாலாஜி. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாகவும் ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
இலாகா மாற்றம்நீதிமன்ற அனுமதியுடன் தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுமே அவர் வசம் இருந்த இரண்டு இலாகாக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் முத்துச்சாமி ஆகியோரிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.
சவுக்கு ஷங்கர் பகீர்செந்தில் பாலாஜி இலாக இல்லாத அமைச்சராக நீடிக்க ஆளுநரிடம் பரிந்துரைத்தது தமிழக அரசு. ஆனால் ஆளுநர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக அறிவித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜி குறித்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் சவுக்கு ஷங்கர் தற்போது பகீர் தகவல் ஒன்றை கூறியுள்ளார்.பினாமிகளிடம் பேசிய அமைச்சர்அதில் செந்தில் பாலாஜி கரூரில் உள்ள தனது பினாமிகளிடம் பேசியதாகவும், அப்போது இன்னும் 10 நாட்களில் வெளியே வந்து அதே இலாகாக்களை பெற்றுவிடுவேன் என அவர்களிடம் உறுதி அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜி மருத்துவர்களின் போன் மூலம் பேசியதாகவும் சவுக்கு ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கலெக்ஷன் நிற்க கூடாதுமேலும் கடைசி வரை முதல்வர் தன்னுடன் இருப்பார் என்றும் எந்த சூழ்நிலையிலும் கலெக்ஷனை நிறுத்தக்கூடாது என்றும் தனது பினாமிகளுடன் பேசியதாகவும் சவுக்கு ஷங்கர் தெரிவித்துள்ளார். சவுக்கு ஷங்கரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அவரது இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூசு தட்டும் சவுக்கு ஷங்கர்
சவுக்கு ஷங்கர் தொடர்ந்து செந்தில் பாலாஜி குறித்து தனது சமூக வலைதள பக்கங்களில் கருத்து தெரிவித்து வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட விஷயங்களை தூசி தட்டி வரும் சவுக்கு ஷங்கர், அவரது வீட்டின் முன்பு செல்பி எடுப்பது, வீட்டின் மதிப்பு குறித்த தகவல்களை வெளியிடுவது என இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தது.
சவுக்கு ஷங்கர்