காதலை மறக்காத பிரபுதேவா… தனது மகளுக்கு நயன்தாரா என்று பெயர் வைத்தாரா?

சென்னை : நடிகர் பிரபுதேவா தனது பெண் குழந்தைக்கு வைத்துள்ள பெயரைக்கேட்டு ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்

இந்தியத் திரையுலகில் முன்னணி நடன இயக்குநர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவர் பிரபுதேவா. இவருடைய நடனதுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

மாரி படத்தில் வரும் ரவுடி பேபி பாடலுக்கு இவர் நடனம் அமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி பல ஆண்டுகளானபோதும், இன்று வரை டிரெண்டிங்கில் உள்ளது.

நடிகர் பிரபுதேவா : நடிகர் பிரபுதேவா 1995ம் ஆண்டு ரமலத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள். இதில் முதல் மகன் உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து குடும்பத்தின் மீது விரக்தியில் இருந்த பிரபு தேவா நயன்தாரவை காதலித்து வந்தார். இருவரும் லிவ்விங் டூ ரிலேஷன் ரிப்பில் இருந்தனர். அப்போது நயன்தாரா, பிரபுதேவாவின் பெயரை கையில் பச்சைகுத்தி இருந்தார். இது அப்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

பிரிந்தனர் : இது பிரபுதேவாவின் குடும்பத்தில் பெரிய பிரச்சனையாக வெடித்த நிலையில், பிரபு தேவா ரமலத்தை விவாகரத்து செய்து விட்டு பிரிந்தார். இதன் பின் நயன்தாராவை பிரபு தேவா திருமணம் செய்து கொள்ளுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

actor Prabhu Deva has named his daughter Nayanthara

இரண்டாவது திருமணம் : இதையடுத்து, 2020ம் ஆண்டு பிரபுதேவா பிசியோதெரபிஸ்ட் ஹிமானி சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரபுதேவா முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த போது, அவருக்கு ஹிமானி சிங் தான் சிகிச்சை அளித்து வந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததை அடுத்து பெண் வீட்டினர் சம்மதத்துடன் சென்னையில் திருமணம் நடைபெற்றது.

மீண்டும் தந்தையானார் : இந்நிலையில், பிரபுதேவாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் தனது பெண் குழந்தைக்கு நயன்தாரா என பெயர் வைத்துள்ளாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை கேள்விப்பட்ட இணையவாசிகள் இது தான் காதலுக்கு மரியாதை கொடுப்பதா என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனால், சிலர் இதற்கு வாய்ப்பே இல்லை என்றும், யாரோ சிலர் கொளுத்தி போட்ட வதந்தி என்று பிரபு தேவாவுக்கு நெருக்கமான சில நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.