வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்: அமெரிக்காவிற்கு 3 நாள் அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடியை இன்று(ஜூன் 21) டுவிட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ. எலான் மஸ்க் சந்தித்தார்.
சந்திப்புக்கு பிறகு எலான் மஸ்க் கூறியதாவது:
பிரதமர் மோடியை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவரது ரசிகன் நான். இந்தியாவில் முதலீடு செய்யுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். நான் அதனை ஏற்றுக்கொண்டேன். அடுத்தாண்டு இந்தியா செல்ல திட்டமிட்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement