சென்னை பிரதமர் மோடிக்கு ஆதிபுருஷ் திரைப்படத்தைத் தடை செய்யக் கோரி அனைத்தித்திய சினிமா தொழிலாளர் சங்கம் கடிதம் அனுப்பி உள்ளது. தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் கதாநாயகனாக நடித்து ஓம் ராவத் இயக்கத்தில் உருவான “ஆதிபுருஷ்” எனும் திரைப்படம் பல மொழிகளில் உலகம் முழுவதும் கடந்த 16-ம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருப்பதாகப் பல மாதங்களுக்கு முன்பே தகவல்கள் வெளியானதால் உலகம் முழுவதும் இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு மிகவும் கூடியிருந்தது. திரைப்படம் வெளியான இரு தினங்களுக்குள்ளேயே இப்படத்தின் காட்சிகள் மற்றும் வசனங்கள் குறித்துப் பல சர்ச்சைகள் […]