ஸ்டாலின் எடுக்கும் ரிவென்ஞ்ச்: சும்மா இருக்குமா டெல்லி? குடும்பத்துக்கு வச்ச குறி!

செந்தில் பாலாஜியின் கைது விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளானது. பாஜக அரசு எதிர்கட்சிகளை முடக்குவதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்று திமுக விளக்கம் அளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தேசிய அளவில் எதிர்கட்சிகள் ஒன்றிணைவதற்கு இந்த சம்பவம் பயன்படும் என்றும் கணக்கு போடப்படுகிறது. ஆனால் செந்தில் பாலாஜியை கைது செய்த விதம், அமலாக்கத்துறை அதிகாரிகளின் அணுகுமுறைகள் திமுக தலைமையை உரசிப்பார்த்துள்ளது.

பாஜகவை பழிவாங்க பயன்படுமா ஆரூத்ரா?மத்தியில் 2024இல் ஆட்சி மாற்றம் நடக்கும் என்று திமுகவினர் பேசி வருகின்றனர். ஸ்டாலினும் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். எனவே ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் பாஜகவை பார்த்துக் கொள்ளலாம் என்று இருப்பதா அதற்கு முன்னர் தங்கள் எதிர்ப்பை காட்டுவதா என்று திமுக தலைமை யோசித்து வந்த நிலையில் பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் என முடிவெடுத்தது. அதன் பின்னர் தான் ஆரூத்ரா வழக்கு வேகமெடுத்ததாம்.
குற்றப்பத்திரிக்கை தாக்கல்!ஆரூத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் பாஜக ஓபிசி அணியின் துணைத் தலைவரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் சம்மந்தப்பட்டுள்ளார். இவர் அண்ணாமலைக்கு மிக நெருக்கமானவர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து பாஜகவுக்கு செக் வைக்க திட்டமிடப்பட்டது. இந்நிலையில் இன்று தமிழக அரசின் கீழ் வரும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் ஆரூத்ரா நிதி நிறுவன 2,438 கோடி ரூபாய் மோசடி வழக்கில் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை இன்று சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.
அமைச்சரவை மாற்ற பின்னணியில் அண்ணாமலை?இந்த வழக்கில் எப்படியாவது தமிழக பாஜகவின் முக்கிய புள்ளிகளை வளைத்தால் பதிலடி கொடுத்தது போல் இருக்கும் என்று திமுக தரப்பு நினைக்கிறதாம். தமிழக அமைச்சரவை கடந்த இரு முறை மாற்றப்பட்டதற்கு பின்னணியில் காரணகர்த்தாவாக பாஜகவே இருந்துள்ளதாம். பிடிஆர் ஆடியோ விவகாரம் எழுந்ததன் பின்னணியில் அண்ணாமலை இருந்தார். செந்தில் பாலாஜியையும் அண்ணாமலை பல முறை குறிவைத்து விமர்சித்து வந்தார்.
தமிழக பாஜக புள்ளிகளுக்கு செக்!வாட்ச் பில் கேட்ட விவகாரமும் அண்ணாமலைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாகவே செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை மோசமாக நடத்தியது என்கிறார்கள் திமுக வட்டாரத்தில். எனவே தமிழக பாஜக புள்ளிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில் ஆருத்ரா வழக்கை கையில் எடுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.
ஸ்டாலின் குடும்பத்துக்கு டெல்லி வச்ச குறி!அதேசமயம் டெல்லி வேறொரு திட்டத்தில் இருக்கிறதாம். திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சிக்கல் ஏற்படுத்தும் விதமாக ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு எதிராக மீண்டும் ஒரு ரெய்டை நடத்த திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள். ஏப்ரல் மாதம் வருமான வரித்துறையினர் நடத்திய ரெய்டில் முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும், ஆருத்ரா வழக்கில் பாஜகவுக்கு எதிராக நடவடிக்கைகள் சென்றால் ஜி ஸ்கொயர் மீது மீண்டும் ரெய்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் டெல்லி புள்ளிகள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.