ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
இந்தியாவில் பிரீமியம் ஸ்மார்ட்போன் செக்மென்ட்டில் சாம்சங், ஒன்பிளஸ், ஆப்பிள், Google போன்ற நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்கின்றன. பொதுவாக பிரீமியம் செக்மென்ட் என்றால் மிகசிறந்த கேமரா, திறன், சிறந்த UI என அனைத்தும் இருக்கும்.
அதில் உங்கள் பட்ஜெட் 50 ஆயிர ரூபாய் என்று இருந்தால் பல ஸ்மார்ட்போன் ஆப்ஷன்கள் உள்ளன. மேலும் கடந்த ஆண்டு லட்சம் ரூபாய்க்கு பக்கம் விற்பனையான பல போன்கள் 50 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் இப்போது கிடைக்கின்றன.
Samsung Galaxy S22கடந்த ஆண்டின் பிரீமியம் பிளாக்ஷிப் ஆண்ட்ராய்டு போனான சாம்சங் கேலக்சி S22 இப்போது இந்தியாவில் 50 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கிறது. இந்த போன் ஒரு 6.1 இன்ச் முழு HD+ டைனமிக் AMOLED 2x டிஸ்பிளே வசதி, 8GB RAM, 128GB ஸ்டோரேஜ், Qualcomm Snapdragon 8 Gen 1 CPU, Corning Gorilla Glass Victus+, IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெஸிஸ்டண்ட் கொண்டுள்ளது.
கேமரா வசதியாக இதில் 50MP டூயல் பிக்சல் PDAF மற்றும் OIS கேமரா உள்ளது. இதனுடன் ஒரு 12MP அல்ட்ரா வைட் கேமரா, 10MP OIS டெலிபோட்டோ கேமரா உள்ளது. பேட்டரி தேவைக்காக 3700mAh பேட்டரி மற்றும் 25W பாஸ்ட் சார்ஜிங் வசதி, 15W வயர்லெஸ் சார்ஜிங் இடம்பெற்றுள்ளது.Motorola Edge 30 Ultraமோட்டோரோலா நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடலாக இருக்கக்கூடிய Edge சீரிஸ் போன்களில் Edge 30 Ultra ஒரு தரமான கேமரா போன். இதில் ஒரு மிகபெரிய 200MP முக்கிய OIS கேமரா, 50MP அல்ட்ரா வைட் கேமரா, 12MP டெலிபோட்டோ கேமரா 2x ஆப்டிகல் ஜூம் வசதியுடன் வருகிறது.
மேலும் ஒரு 6.67 இன்ச் முழு HD+ 10 bit pOLED டிஸ்பிளே வசதி, 144HZ refresh rate, Qualcomm Snapdragon 8+Gen 1 சிப், 12GB RAM, 256GB ஸ்டோரேஜ் வசதி உள்ளது.Oneplus 11Rஒன்பிளஸ் நிறுவனத்தின் பிளாக்ஷிப் மாடல் போனாக இருக்கும் Oneplus 11 போனின் சிறிய மாடல் இந்த 11R. இதில் 6.74 இன்ச் கர்வ் டிஸ்பிளே வசதி, 2772×1240 Pixels Resolution, Qualcomm Snapdragon 8+Gen 1 CPU வசதி, AMOLED டிஸ்பிளே வசதி, 50MP முக்கிய கேமரா, 8MP அல்ட்ரா வைட் மற்றும் 2MP மேக்ரோ கேமரா உள்ளது.
இதன் முன்பக்க செல்பி கேமரா வசதியாக 16MP கேமெராவும், 5000mAh பேட்டரி வசதி, 100W பாஸ்ட் சார்ஜிங் மூலம் 30 நிமிடங்களில் முழு சார்ஜிங், Android 13 சார்ந்து உருவாக்கப்பட்ட Oxygen OS 13 போன்ற வசதிகள் இடம்பெறுகின்றன.Xiaomi 12 Pro 5Gஇந்த செக்மென்ட்டில் சிறந்த வேல்யூ போனாக இந்த சியோமி போன் உள்ளது. இதில் ஒரு 6.73 இன்ச் AMOLED டிஸ்பிளே வசதி, Corning Gorilla Glass Victus பாதுகாப்பு, 8GB RAM அல்லது 12GB RAM ஆப்ஷன், Qualcomm Snapdragon 8 Gen 1 சிப் வசதி, 50MP முக்கிய OIS கேமரா, முன்பக்க 32MP செல்பி கேமரா இடம்பெற்றுள்ளது.
கூடுதலாக Harman kardon டியூனிங் செய்த Quad ஸ்டீரியோ ஸ்பீக்கர் வசதிஇருப்பதால் ஆடியோ தரம் சிறப்பாகவும் அதேநேரம் 4600mAh பேட்டரி மற்றும் 120W சார்ஜ்ர் இருப்பதால் வெறும் 18 நிமிடங்களில் முழுமையான சார்ஜிங் பெறலாம்.iQoo 9 pro 5Gஇதில் 6.78 இன்ச், 10பிட் HDR10 + AMOLED டிஸ்பிளே, 3200 x 1440 Pixels Resolution வசதி, 120HZ refresh rate, Android 13 சார்ந்த Funtouch OS 13, 8GB RAM, 256GB ஸ்டோரேஜ் வசதி இடம்பெற்றுள்ளது.
கேமரா வசதியாக 50MP Gimbal OIS வசதியுடன் கூடிய முக்கிய கேமரா, ஆட்டோ போகஸ் உள்ள 50MP அல்ட்ரா வைட் கேமரா, 2.5x ஜூம் உள்ள 16MP டெலிபோட்டோ கேமரா உள்ளது. முன்பக்க செல்பிக்காக 16MP கேமரா இடம்பெற்றுள்ளது. இதில் 4700mAh பேட்டரி வசதி, 120W பாஸ்ட் சார்ஜிங் உடன் இருப்பதால் 20 நிமிடங்களில் முழுமையான சார்ஜிங் பெறமுடியும்.செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்