விஜய்யின் ‘தளபதி 68’ படம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே அந்தப்படம் குறித்த பேச்சுக்கள் தான் சோஷியல் மீடியாவில் நிரம்பி வழிந்தது. இதனால் ‘லியோ’ படம் குறித்த பேச்சுக்கள் அடங்கியது. தற்போது மீண்டும் ‘லியோ’ படம் குறித்த பேச்சுக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனால் தளபதி ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் படம் ‘லியோ’. தமிழ் சினிமாவின் சென்சேஷனல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். பொதுவாகவே இவரது படத்தில் வில்லன்களுக்கு வெயிட்டான ரோல்கள் இருக்கும். அந்த வகையில் தற்போது ‘லியோ’ படத்தில் ஏராளமான வில்லன்கள் நடித்து வருகின்றனர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அனைவருமே வெயிட்டான ஆட்கள் என்பதால் ‘லியோ’ படத்தில் யார் மெயினான வில்லனாக இருப்பர்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்நிலையில் ரசிகர்களின் இந்த சந்தேகத்திற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. அதன்படி ‘லியோ’ பட தயாரிப்பாளர் லலித் குமார் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், ‘லியோ’ படத்தின் மெயின் வில்லன் சஞ்சய் தத் தான் என்று கூறியுள்ளார்.
‘மாஸ்டர்’ படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் போல் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். ‘கேஜிஎப் 2’ படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய சஞ்சய் தத், தற்போது ‘லியோ’ படத்தில் மெயின் வில்லன் என கன்பார்ம் ஆகியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதே நேரம் ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்யை விட விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது. அதே போல் ‘லியோ’ படத்திலும் எதுவும் ஆகிவிடக்கூடாது என்றும் ரசிகர்கள் பயப்படுகின்றனர்.
Lal Salaam: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இவ்வளவு கருத்து போயிட்டாரே: எல்லாம் இதுக்காக தான்.!
முன்னதாக ‘லியோ’ படத்தில் சஞ்சய் தத், விஜய்க்கு அப்பாவாக நடிப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவரின் கதாபாத்திரம் குறித்து தற்போது தெளிவுப்படுத்தியுள்ளார் தயாரிப்பாளர் லலித் குமார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் ‘லியோ’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘நா ரெடி’ பாடல் நாளைய தினம் வெளியாகவுள்ளது. இந்தப்பாடலை விஜய் பாடியுள்ளார்.
‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய், லோகேஷ் கனகாராஜ் கூட்டணி ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளனர். இந்தப்படத்தில் சஞ்சய் தத், மிஷ்கின், கெளதம் மேனன், திரிஷா, அர்ஜுன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே இணைந்து நடித்து வருகின்றனர். ‘லியோ’ படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகை கனகா குறித்து கங்கை அமரன் வேதனை..வீட்டிற்கு சென்றும் பார்க்க முடியவில்லை!