சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகிறது.
நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.
ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தப் படத்தின் தியேட்டர் ரைட்ஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி சன் பிக்சர்ஸ் படங்களை எப்போதும் வெளியிடும் ரெட் ஜெயன்ட்டுக்கு பதிலாக இன்னொரு பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.
கைமாறிய ஜெயிலர் தியேட்டர் ரைட்ஸ்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. ரஜினி – நெல்சன் கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ள ஜெயிலர் கண்டிப்பாக ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராப், மோகன் லால், சிவ ராஜ்குமார், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி மல்டி ஸ்டார்ஸ் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இம்மாதம் இறுதிக்குள் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அல்லது கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே தம்மன்னா செம்ம ஹாட்டாக நடித்துள்ள ஜீ கர்தா வெப் சீரிஸ் கடந்த வாரம் வெளியாகி வைரலானது. இதனால், ஜெயிலர் படத்தின் ப்ரோமோஷனுக்கு சிக்கல் எழுந்துள்ளதாம். இன்னொரு பக்கம் ஜெயிலர் தியேட்டர் ரைட்ஸ் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்களின் தியேட்டர் ரைட்ஸை எப்போதும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் கைப்பற்றும்.
ஆனால், ஜெயிலர் தியேட்டர் ரைட்ஸ் ரெட் ஜெயன்ட் வசம் செல்லவில்லை என சொல்லப்படுகிறது. உதயநிதியின் சொந்த நிறுவனமான ரெட் ஜெயன்ட் பட தயாரிப்பு மட்டுமின்றி தியேட்டர் ரைட்ஸ் பிஸினஸும் செய்து வந்தது. ஆனால், அரசியலுக்கு வந்த பின்னர் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக அவரே கூறி வருகிறார். அதனால், ஜெயிலர் ரைட்ஸ் ஐங்கரன் நிறுவனத்திடம் சென்றுள்ளதாம்.
ஜெயிலர் ஓவர்சீஸ் தியேட்டர் ரைட்ஸை ஐங்கரன் நிறுவனம் கைப்பற்றிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் இது ஓவர்சீஸ் ரைட்ஸ் மட்டும் தானா அல்லது தமிழ்நாட்டு தியேட்டர் உரிமையும் சேர்த்தா எனத் தெரியவில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஜெயிலர் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனத்துக்குப் பதில் ஐங்கரன் கைப்பற்றியது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.