சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பீகார் செல்கிறார். அவர், நாளை மறுநாள் நடைபெற உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். கூட்டத்தில் ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, மம்தா பானர்ஜி உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வியூகங்கள் அமைக்கப்படும் என்றும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓர் அணியில் திரள தேவையான ஆலோசனைகள் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.