ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
அமெரிக்காவிற்கு முதல்முறை அரசு முறைப் பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடி, ஐ.நா சபையின் தலைமை அலுவலகத்தில் நடந்த சர்வதேச யோகா தின விழாவில் பங்கேற்றார். இன்று இரவு வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ படைன் அளிக்கும் விருந்தில் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார். இதற்கிடையில் அமெரிக்காவில் உள்ள பல்வேறு தலைவர்கள், தொழிலதிபர்கள், பல்துறை வல்லுநர்கள், கலைஞர்கள் உள்ளிட்டோரை பிரதமர் மோடி சந்தித்து பேசி வருகிறார்.
3 நாள் சுற்றுப்பயணம் சென்ற மோடி
எலான் மஸ்க் – பிரதமர் மோடி சந்திப்பு
அந்த வகையில் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்கை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். முன்னதாக தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்த எலான் மஸ்க், உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமை எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில், உங்களை (எலான் மஸ்க்) சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
அமெரிக்காவில் பிரதமர் மோடி… வெள்ளை மாளிகை விருந்து டூ எலான் மஸ்க் சந்திப்பு… கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!
இந்தியாவிற்கு சர்ப்ரைஸ்
எரிசக்தி முதல் ஆன்மீகம் வரை பல்வேறு விஷயங்களை ஆலோசித்தோம் எனப் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியை சந்தித்த பின்னர், எலான் மஸ்க் அளித்த பேட்டி பெரிதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏனெனில் அதில் இந்தியாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விஷயங்களும் அடங்கியிருப்பது கவனிக்கத்தக்கது. அவர் பேசியதை இங்கே காணலாம்.
மோடியின் ரசிகன்
“இந்தியா மீது மிகுந்த பற்று கொண்டவர் மோடி. ஏனெனில் இந்தியாவில் பெரிய அளவில் முதலீடுகள் செய்ய எங்களை ஊக்கப்படுத்தினார். அவருடனான சந்திப்பு மிகவும் சிறப்பாக அமைந்தது. இந்த இடத்தில் ஒரு விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். நான் மோடியின் தீவிர ரசிகன். இந்தியாவை பொறுத்தவரை சோலார் ஆற்றல் துறையில் முதலீடு செய்ய பெரிய அளவில் வாய்ப்புகள் இருக்கின்றன.
இந்தியாவில் டெஸ்லா
அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு வருகை புரியலாம் என திட்டமிட்டுள்ளேன். நான் உறுதியாக நம்புகிறேன். இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் கால் பதிக்கும். அதற்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். எங்களுக்கு அளித்த ஒத்துழைப்பிற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். கூடிய விரைவில் முக்கியமான அறிவிப்பு வெளியாகும்.
ரஷ்யா கையிலெடுத்த அணு ஆயுதங்கள்… பெலாரஸில் மெகா வியூகம்… பதறிப் போன உலகம்!
மிகப்பெரிய முதலீடுகள்
இந்தியாவில் பெரிய அளவில் முதலீடுகள் செய்ய ஆர்வமாக இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்தார். இந்த அறிவிப்பு இந்தியர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது. சமீபத்தில் இந்திய அரசுக்கு சாதகமான ஒரு கருத்தை எலான் மஸ்க் தெரிவித்தது கவனிக்கத்தக்கது. அதாவது, முன்னாள் ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜேக் டோர்சி கூறுகையில், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடந்த போது அதை இருட்டடிப்பு செய்ய இந்திய அரசால் மிரட்டப்பட்டதாக கூறி பகீர் கிளப்பினார்.
ஜேக் டோர்ஸிக்கு பதிலடி
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஒவ்வொரு அரசும் வெவ்வேறான சட்டங்களை, வழிகாட்டுதல்களை செயல்படுத்தி வருகின்றன. அதற்கு கட்டுப்பட்டு சுதந்திரமான சேவையை அளிக்க முன்வர வேண்டும். இல்லையெனில் நிறுவனத்தை மூடிவிட்டு போகலாம் எனக் காட்டமாக எலான் மஸ்க் கருத்து தெரிவித்திருந்தார்.