பல ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய டைட்டானிக் சொகுசு கப்பலை பார்வையிட டைட்டன் என்ற நீர்மூழ்கி கப்பல் கடந்த ஞாயிற்றுக் கிழமை புறப்பட்டது. இந்த நீர்மூழ்கி கப்பலில் 5 சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்தனர். நீர்மூழ்கி கப்பல் தனது பயணத்தை தொடங்கிய 2 மணி நேரத்திலேயே அனைத்து தொடர்புகளையும் இழந்தது.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
அட்லாண்டிக் பெருங்கடலில் மாயமாகி உள்ள டைட்டன் நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியில் அமெரிக்க கடலோர காவல் படை ஈடுபட்டுள்ளது. இதன் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதால் நீர் மூழ்கி கப்பலை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அமெரிக்க கடலோர காவல் படையினர் நீர் மூழ்கி கப்பலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இத்தனை நாள் தப்பித்ததே ஆச்சரியம்… உமா கார்கி கைது.. கஸ்தூரி தடாலடி!
மாயமான இந்த நீர்மூழ்கி கப்பலில் பிரிட்டிஷ் பணக்காரர்களில் ஒருவரான ஹமிஷ் ஹார்டிங், பிரெஞ்சு நீர்மூழ்கி கப்பல் பைலட் பால்-ஹென்றி நர்கோலெட் மற்றும் ஓபன் கேட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்டாக்டான் ரஷ், பாகிஸ்தான் தொழில் பாகிஸ்தான் தொழில் அதிபர் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் ஆகிய 5 பேர் கொண்ட குழு பயணம் மேற்கொண்டுள்ளது.
ஞாயிற்றுக் கிழமை காலை முதல் கனேடிய கப்பல்கள் மற்றும் விமானங்கள் கடந்த 4 நாட்களாக தேடுதல் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் வடக்கு அட்லாண்டிக்கு கடல் பகுதியில் நீர்மூழ்கி கப்பல் மாயமான இடத்திற்கு அருகில் வித்தியாசமான சத்தம் கேட்டதாக அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
மாடர்ன் லுக்கில் மிரட்டும் பிக்பாஸ் கேபி… க்யூட் க்ளிக்ஸ்!
கனேடிய P-3 விமானம் – சோனார் மிதவைகளைப் பயன்படுத்தி இந்த ஒலிகளைக் கேட்டதாகவும் தற்போது அமெரிக்க கடற்படை நிபுணர்கள் அந்த ஒலியை பகுப்பாய்வு செய்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீர்மூழ்கி கப்பலை ஆராய்வதற்காக அண்டர்வாட்டர் ஆப்ரேஷன்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆபரேஷனில் பயன்படுத்தப்படும் ரிமோட் வாகனங்கள் மூலம் இதுவரை எந்த சாதகமான பதிலும் கிடைக்கவில்லை.
இருப்பினும் ரிமோட் வாகனங்கள் மூலம் தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் செவ்வாய்க் கிழமை 30 நிமிட இடைவெளியில் இடித்தல் சத்தம் கேட்கப்பட்டதாகவும் இதனை தொடர்ந்து நான்கு மணி நேரம் கழித்து கூடுதல் சோனார் மிதவைகள் பயன்படுத்தப்பட்டபோது சத்தத்தை இன்னும் அதிகமாக கேட்க முடிந்தது என்றும் அமெரிக்க அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி போறவங்களுக்கு இனி ஜாலிதான்.. அடியோடு குறைந்த கூட்டம்… மளமளவென நடக்கும் தரிசனம்!
இதனிடையே சுற்றுலாப் பயணிகளுடன் காணமல் போன டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் இன்னும் 30 மணி நேரத்திற்கு மட்டுமே ஆக்ஸிஜன் உள்ளது. அதற்குள் நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அதில் இருக்கும் சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.