ஜெயக்குமார்: டெல்லிக்கு எங்க தலைவர் போறாரு.. திமுக அரசு டிஸ்மிஸ் ஆகுதா இல்லையானு பாருங்க..

சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கும் சூழலில், அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் சில விஷயங்களை அதிரடியாக கூறியுள்ளார். விரைவில் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு செல்லவுள்ளதாகவும், அதன் பிறகு திமுக அரசு டிஸ்மிஸ் என்ற நல்ல செய்தி வரும் எனவும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

பணமோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு காவேரி மருத்துவமனையில் இன்று இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. இது ஒருபுறம் இருக்க, செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரித்தால் திமுக தலைவர்கள் பலர் சிக்குவார்கள் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து பல விஷயங்களை கூறினார். அவர் பேசியதாவது:

செந்தில் பாலாஜி கைது விவகாரம் சாதாரண விஷயம் அல்ல. இனிதான் இந்த விஷயத்தில் பல அதிரடிகள் அரங்கேறப் போகின்றன. செந்தில் பாலாஜி வாய் திறந்தார்னா திமுகவில் முக்கால்வாசி பேர் ஜெயிலுக்கு போயிடுவாங்க. இன்னும் சில நாட்களில் அமைச்சர் பொன்முடியை தூக்கிடுவாங்க. அப்புறம் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆரை தூக்கப் போறாங்க. அதுக்காகதான் செந்தில் பாலாஜி கைதுக்கு திமுக இப்படி அலறுது.

செந்தில் பாலாஜி என்ன பெரிய தியாகியா..இல்லைனா அரிச்சந்திரன் குடும்பத்தைச் சேர்ந்தவரா? அவர் ஒரு ஃப்ராடு. எதிர்க்கட்சித் தலைவரா ஸ்டாலின் இருந்த போது, செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுப்போம்னு சொன்னாரா இல்லையா? தமிழ்நாட்டு மக்கள் திமுகவோடு ஏமாற்றுத்தனத்தையும், ஊழல்களையும் பார்த்துட்டுதான் இருக்காங்க. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளை அதிமுகவுக்கு மக்கள் கொடுப்பாங்க. அதுக்கு முன்னாடி கூட சில விஷயங்கள் நடக்கலாம். எங்க தலைவர் (எடப்பாடி பழனிசாமி) டெல்லிக்கு போகப்போறாரு. அதனால் திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது என்ற நல்ல செய்தி கூட வரலாம். இவ்வாறு ஜெயக்குமார் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.