ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
விஜய் இன்று இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். அவர் இந்த உயரத்தை அடைந்துள்ளார் என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் அவரின் உழைப்பும் திறனும் தான். என்னதான் கடுமையான விமர்சனங்கள் தன் மீது வந்தாலும் அதையெல்லாம் காதில் வாங்காது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினார் விஜய்.
கிட்டத்தட்ட விஜய் நடிக்க வந்து 30 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த 30 வருட திரைவாழ்க்கையில் விஜய் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார். இவர் பார்க்காத வெற்றியும் இல்லை சந்திக்காத தோல்வியும் இல்லை. ஆனாலும் எந்த சூழலிலும் விஜய் தன்னிலை மாறாமல் இருந்து வருகின்றார். இதற்கு மிக முக்கிய காரணம் இவரை வழிநடத்திய இவரின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் தான்.
Maari selvaraj: மாரி செல்வராஜ் என்னை ஷூட்டிங் ஸ்பாட்லயே அடிச்சாரு..வேதனையில் பேசிய நடிகர்..!
என்னதான் தற்போது இவர்களுக்குள் சில பிரச்சனைகள் இருந்தாலும் விஜய் எப்போதும் தன் தந்தையின் மீது பாசமும், பற்றும் வைத்துள்ளார். இந்நிலையில் நடிக்க வந்த ஆரம்பகாலகட்டத்தில் விஜய்யை ஒரு ஹீரோவாக ரசிகர்கள் மனதில் இடம்பெற செய்ய கடுமையாக போராடினார் எஸ்.ஏ சந்திரசேகர்.
விஜய்யை அடித்த எஸ்.ஏ சந்திரசேகர்
அதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டார். அதில் ஒன்று தான் விஜயகாந்துடன் விஜய்யை எஸ்.ஏ சந்திரசேகர் நடித்த வைத்தது. செந்தூரபாண்டி என்ற படத்தில் விஜய்யுடன் விஜயகாந்தை நடிக்கவைத்து விஜய்யை பிரபலமாக்கினார் எஸ்.ஏ சந்திரசேகர். இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை சமீபத்தில் பிரபல நடிகர் பொன்னம்பலம் கூறியுள்ளார்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
செந்தூரபாண்டி படத்தில் வில்லனாக நடித்தார் பொன்னம்பலம். அப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை அடித்துள்ளார் எஸ்.ஏ சந்திரசேகர். இதைப்பார்த்த பொன்னம்பலம் எஸ்.ஏ சந்திரசேகரிடம் சென்று, என்னதான் அவர் உங்கள் மகனாக இருந்தாலும் இப்படத்தில் அவர் தான் ஹீரோ, ஒரு ஹீரோவை செட்டில் அனைவரின் முன்னிலையும் அடிக்கக்கூடாது என எஸ்.ஏ சந்திரசேகரிடம் சண்டைக்கு சென்றுள்ளார் பொன்னம்பலம்.
கண்டித்த பொன்னம்பலம்
இந்த தகவலை பொன்னம்பலம் சமீபத்தியில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மேலும் விஜய் முன்னணி ஹீரோவாக வரவேண்டும் என தான் எஸ்.ஏ சந்திரசேகர் கண்டிப்புடன் நடந்துகொண்டார். அவரால் தான் விஜய் இந்த உயரத்தை அடைந்துள்ளார் எனவும் பேசியுள்ளார் பொன்னம்பலம் என்பது குறிப்பிடத்தக்கது.