Upcoming Hyundai Exter – ஹூண்டாய் எக்ஸ்டர் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

டாடா பஞ்ச், சிட்ரோன் சி3, உள்ளிட்ட எஸ்யூவி கார்களுக்கு சவாலாக வரவிருக்கும் ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவி காரை பற்றி தற்பொழுது வரை வெளியிடப்பட்டுள்ள விபரங்கள் மற்றும் முக்கிய சிறப்புகளை அறிந்து கொள்ளலாம். இந்நிறுவனம், விற்பனை செய்து வருகின்ற கிராண்ட் ஐ10 நியோஸ், ஆரா செடான் இரண்டு கார்களின் பிளாட்ஃபாரத்தினை பகிர்ந்து கொள்ளுகின்ற எக்ஸ்ட்ர் பல்வேறு வசதிகளை முதல்முறையாக இந்த பிரிவில் பெறுகின்றது.

முதன்முறையாக இந்த எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட உள்ள பிரிவில் சிஎன்ஜி என்ஜின் ஆப்ஷன், டேஸ் கேம், 6 ஏர்பேக்குகள், சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகள் கவனிக்க வேண்டியவை ஆகும்.

Hyundai Exter

எஸ்யூவிகளுக்கு உரித்தான பாக்ஸ் வடிவத்தை பெற்றதாகவும், கிரில், சி-பில்லர் மற்றும் டெயில் கேட் ஆகியவை ஹூண்டாயின் பாரம்பரியத்தை நினைவுப்படுத்தும் வகையிலும், தற்பொழுது வருகின்ற புதிய ஹூண்டாய் கார்களில் இடம்பெறுகின்ற H வடிவத்தை நினைவுப்படுத்தும் எல்இடி விளக்குகள் எக்ஸ்டர் காருக்கு வழங்கப்பட்டுள்ளது. இருபிரிவுகளை பெற்ற எல்இடி ஹெட்லேம்ப் கொண்டதாக உள்ளது.

எக்ஸ்டரில் சக்கர வளைவுகள் மற்றும் கதவுகளில் தடிமனான கிளாடிங் கொடுக்கப்பட்டு காருக்கு மேலும் கம்பீரத்தை வழங்குகின்றது.

Hyundai Exter Rear view

பின்பகுதியில் வழங்கப்பட்டுள்ள டெயில்கேட் நம்பர் பிளேட் பகுதியில் டெஸ்டர் வடிவத்தை கொடுத்து, பின்புற பம்பர் கருப்பு நிறத்தை பெற்று மற்றும் மிக முக்கியமான ஃபாக்ஸ் சில்வர் ஸ்கிட் பிளேட்டுடன் டூயல்-டோன் தோற்றத்தை வெளிப்படுத்துகின்றது.

எக்ஸ்டர் என்ஜின்

விற்பனைக்கு வரும்பொழுதே சிஎன்ஜி ஆப்ஷன் பெற்றதாக வரவுள்ள ஹூண்டாயின் எக்ஸ்டரில் 81 hp பவரை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி என இரண்டிலும். சிஎன்ஜி ஆப்ஷனில் 69 hp பவர் மற்றும் 95.2Nm டார்க் வழங்கும். 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் வரவுள்ளது.

EX, S, SX, SX(O), மற்றும் SX(O) Connect என மொத்தமாக 5 விதமான வேரியண்டுகளில் வரவுள்ளது.

exter suv dashboard

exter suv interior

எக்ஸ்டர் வசதிகள்

நியோஸ் மற்றும் ஆரா செடானில் இடம்பெற்றிருக்கின்ற உட்புறத்தில் நிறத்தை முழு-கருப்பு வண்ணத்தை வழங்கியுள்ளது. 4.2 இன்ச் எம்ஐடியுடன் கூடிய முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் உள்ளது.

8.0 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் கொண்டு பல்வேறு கனெக்ட்டிவ் வசதிகளை டாப் வேரியண்ட் வழங்க உள்ளது. ஆட்டோ ஏசி கட்டுப்பாடு, ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, நேவிகேஷன் மற்றும் சன்ரூஃப் ஆகியவற்றை பெற்றுள்ளது.

  • 6 ஏர்பேக்குகள் (டிரைவர், பயணிகள், கர்டைன் & பக்கவாட்டு) கொண்டுள்ளது.
  • அனைத்து வகைகளிலும்  26 பாதுகாப்பு அம்சங்களை பெற்றுள்ளது. துவக்க நிலை வேரியண்டுகளில் ஆப்ஷனலாக (E & S) உள்ளது.
  • ESC (Electronic Stability Control), VSM (Vehicle Stability Management) மற்றும் HAC (Hill Assist Control), 3-பாயின்ட் சீட் பெல்ட் & சீட்பெல்ட் நினைவூட்டல் (அனைத்து இருக்கைகள்), EBD உடன் ஏபிஎஸ், பர்க்லர் அலாரம் பெற்றுள்ளது.
  • 40க்கும் மேற்பட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களில் குறிப்பாக இரட்டை கேமரா உடன் கூடிய டேஸ்கேம் (Dashcam), ISOFIX, ஹெட்லேம்ப் எஸ்கார்ட் வசதி, ரியர் பார்க்கிங் கேமரா வசதி ஆகியை உள்ளது.

exter front row seats

exter suv rear seats

எக்ஸ்டர் போட்டியாளர்கள்

இந்திய சந்தையில் பிரபலமான டாடா பஞ்ச், சிட்ரோன் C3, ரெனால்ட் கிகர் மற்றும் நிசான் மேக்னைட் உள்ளிட்ட எஸ்யூவிகளுக்கு போட்டியாக இருக்கும்.

ஹூண்டாய் எக்ஸ்டர் விலை எதிர்பார்ப்புகள்

ஜூலை 10,2023 அன்றைக்கு வெளியிடப்பட உள்ள காருக்கான முன்பதிவு நடைபெற்று வருகின்றது. முன்பதிவு கட்டணம் ரூ.11,000 ஆக வசூலிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக போட்டியாளர்களை எதிர்கொள்ளும் வகையில் ரூ.6.50 – ரூ.7.00 லட்சத்திற்குள் அறிமுகம் செய்யப்படலாம்.

Hyundai Exter suv hyundai exter suv get sunroof

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.