லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லியோ’. கோலிவுட் சினிமா வட்டாரத்தில் இந்தப்படம் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. நாளை விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப்படத்தின் ‘நா ரெடி’ என்ற பாடல் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்தப்பாடல் ரீலிசாவதற்கு முன்பாக ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி அளிக்கும் விதமாக ‘லியோ’ படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
நடிகர் விஜய்யின் 49 வது பிறந்தநாள் நாளைய தினம் கொண்டாடப்படவுள்ளது. விஜய்யின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கு அவர் நடித்து வரும் படங்களின் அப்டேட்கள் வெளியாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் இந்தாண்டு விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ‘லியோ’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவிருக்கிறது. இந்தப்பாடலின் புரோமோ வீடியோ நேற்றைய தினம் வெளியானது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அனிருத் இசையில் ‘நா ரெடி’ என துவங்கும் இந்தப்பாடலை விஜய் பாடியுள்ளார். இதன் புரோமோ வீடியோவே ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிலையில் நாளை வெளியாகவுள்ள பர்ஸ்ட் சிங்கிளுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் ‘நா ரெடி’ பாடல் ரிலீசாவதற்கு முன்பே ‘லியோ’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் இரட்டை மகிழ்ச்சியில் உள்ளனர். இதனையடுத்து நள்ளிரவு 12 மணியில் இருந்தே விஜய் பிறந்தநாளை கொண்டாட அவரது ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
விஷம் கொடுத்து கொல்ல சதி: பிரபல வில்லன் நடிகர் பரபரப்பு புகார்.!
‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்துள்ளனர். ‘விக்ரம்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு தனி மவுசு ஏற்பட்டுள்ளது. இதனால் ‘லியோ’ படம் ப்ரீ பிசினஸில் பட்டையை கிளப்பி வருவதாக கூறப்படுகிறது. ‘மாஸ்டர்’ படம் போல் இல்லாமல் லியோவை முழுக்க முழுக்க தன்னுடைய பாணியில் இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
‘லியோ’ படத்தின் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்யுடன் திரிஷா இணைந்துள்ளார். மேலும், பிரபல ‘கேஜிஎப்’ வில்லன் சஞ்சய் தத், இயக்குனர்கள் மிஷ்கின், கெளதம் மேனன் மற்றும் அர்ஜுன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். ‘லியோ’ படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி பிரம்மாண்டமாக ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Leo: விஜய்யுடன் சரியான ஆளை மோத விட்டிருக்கும் லோகேஷ்: அதை நினைச்சா தான் பயமா இருக்கு.!