ஓடிடியில் வெளியாகும் குட்நைட் திரைப்படம் – எப்போது தெரியுமா?
இயக்குனர் சந்திரசேகரன் இயக்கத்தில் ‘ஜெய் பீம்’ படத்தின் கதாநாயகன் நடிகர் மணிகண்டன் நடித்துள்ள திரைப்படம் ‘குட் நைட்’. இந்த படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக நடிகை மீதா ரகுநாத் நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் ரமேஷ் திலக், இயக்குனர் பாலாஜி சக்திவேல், பக்ஸ் பகுவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மில்லியன் டாலர் ஸ்டியோஸ் மற்றும் எம்.ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
தூக்கத்தில் வரும் குறட்டையால் ஒரு இளைஞனை எவ்வாறு பாதிக்கப்படுகிறான் என்பதை வைத்து வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, குறட்டை படம் வருகிற ஜூலை 3-ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. ’குட் நைட்’ திரைப்படத்தை, டிஸ்னி+ஹாட்ஸ்டார் தளத்தில் தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியிலும் ரசிக்கலாம்.