டில்லி கர்நாடகாவின் இலவச அரிசி திட்டத்துக்கு அரிசி வழங்க மறுப்பது ஏழைகளுக்கு எதிரானது எனக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு நபர் ஒருவருக்கு மாதம் 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்தது. அன்ன பாக்யா என்ற அந்தத் திட்டம் ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கப்படும் என முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார். இதையடுத்து, வெளிச் சந்தையில் அரசி வழங்குவதை நிறுத்துவதாக இந்திய உணவுக் கழகம் அறிவித்துள்ளது. […]