வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷங்டன் டி.சி: அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியை இன்று(ஜூன்-22) அமெரிக்காவின் முன்னணி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகள் சந்தித்து பேசினர்.
அதன்படி ஜெனரல் எலெக்ட்ரிக் ஏரோஸ்பேஸ் நிர்வாக அதிகாரி எச். லாரன்ஸ் கல்ப் ஜூனியர், மற்றும் மைக்ரான் தொழில்நுட்பத்தின் தலைவர்-தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் மெஹ்ரோத்ரா ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.
இது குறித்து சஞ்சய் மெஹ்ரோத்ரா கூறியதாவது: பிரதமர் மோடியுடனான எனது சந்திப்பு மிகவும் சிறப்பானதாக இருந்தது. இந்தியா குறித்த அவரது பார்வை மற்றும் இந்தியாவின் வளர்ச்சி குறி்த்த அவரது சிந்தனையால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். நாங்கள் பல்வேறு விசயங்கள் குறித்து விவாதித்தோம். இந்தியாவுக்கு அதிகமான வாய்ப்புகளை வழங்குவது குறித்து ஆலோசித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement