It is not a crime to cheat on a married woman | திருமணமான பெண்ணை ஏமாற்றுவது குற்றம் ஆகாது

பெங்களூரு, ‘திருமணமான பெண்ணை ஏமாற்றுவது குற்றம் ஆகாது’ என, கர்நாடகா உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, பெங்களூரைச் சேர்ந்தவர் பிரஜித், 28.

இவருக்கு, திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிப் பழகினர்.

திருமணம் செய்வதாக கூறி உல்லாசமாக இருந்தார். வெளிநாட்டில் வேலை கிடைத்ததும், பெண்ணுடன் இருந்த உறவை பிரஜித் துண்டித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரில், பிரஜித் மீது போலீசார் இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பிரஜித் மனு செய்தார். நீதிபதி நாகபிரசன்னா நேற்று விசாரித்து உத்தரவிட்டதாவது:

மனுதாரர் மீது புகார் கொடுத்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. கணவரை அவர் விவாகரத்து செய்யவில்லை.

விவாகரத்து செய்யாமல், இன்னொரு நபரை திருமணம் செய்ய நினைக்கும் பெண்ணை ஏமாற்றுவது குற்றம் ஆகாது. இதனால், மனுதாரர் மீது பதிவான வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.