ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அனைவரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். அவரின் பிறந்தநாளை திருவிழாவை போல அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பல நலத்திட்ட உதவிகளை விஜய்யின் பெயரில் அவர்கள் செய்து வருகின்றனர்.
மறுபக்கம் விஜய்யின் பர்த்டே ஸ்பெஷலாக லியோ படத்தில் இருந்து போஸ்டரும், நா ரெடி என்ற விஜய் பாடிய பாடலும் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து பல திரையரங்கங்களில் விஜய்யின் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றது.
Vijay: விஜய் – சங்கீதா காதல் கதை..காதல் மலர்ந்தது எப்படி ?வெளியான சுவாரஸ்யமான தகவல்..!
இவ்வாறு விஜய்யின் பிறந்தநாள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விஜய்யுடன் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் அவருடன் பணியாற்றிய அனுபவம் பற்றியும், அவரின் புகழ் பற்றியும் பேசி வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனர் ஏ.வெங்கடேஷ் விஜய்யை பற்றி பேசியுள்ளார்.
விஜய்யை பற்றி பேசிய வெங்கடேஷ்
விஜய்யை வைத்து செல்வா, நிலவே வா, பகவதி என மூன்று படங்களை இயக்கியுள்ளார் ஏ.வெங்கடேஷ். குறிப்பாக விஜய்யை வைத்து பகவதி படத்தை இயக்கி விஜய்யை ஆக்ஷன் ஹீரோவாக திருமலை படத்திற்கு முன்பே அறிமுகம் செய்தார் ஏ.வெங்கடேஷ். அப்படம் தான் விஜய்யின் ஆக்ஷன் அவதாரத்திற்கு அடித்தளம் போட்டது.
விஜய்யின் எளிமை
இந்நிலையில் பகவதி படத்தின் படப்பிடிப்பின் போது நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான சம்பவம் பற்றி பேசியுள்ளார் ஏ.வெங்கடேஷ். அவர் கூறியதாவது, ஒரு முறை பகவதி படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் செய்த காரியம் என்னை ஆச்சரியப்படுத்தியது. படப்பிடிப்பின் இடைவேளையின் போது நான் ஒரு பைக்கை எடுத்துக்கொண்டு ரவுண்டு சென்றேன்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
அப்போது ஒரு ஓரத்தில் ரோட்டின் தரையில் விஜய் ஒரு துண்டை விரித்து படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அதைப்பார்த்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அவரை எழுப்ப எனக்கு மனம் வரவில்லை. நன்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் விஜய். அதனால் அவரை எழுப்பாமல் வந்துவிட்டேன் என்றார் ஏ.வெங்கடேஷ். கடந்த 2002 ஆம் ஆண்டு விஜய் மற்றும் வெங்கடேஷ் கூட்டணியில் வெளியான பகவதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.