திருப்பதி:திருமலை ஏழுமலையான் பெயரில், தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள ஸ்ரீவாணி அறக்கட்டளையில் தற்போது, 860 கோடி ரூபாய் நிதி இருப்பதாக தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி கூறினார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
திருமலை ஏழுமலையான் கோவிலை நாடு முழுதும் ஏற்படுத்தும் நோக்கத்துடன், 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்ரீவாணி அறக்கட்டளை துவக்கப்பட்டது. .
இந்த அறக்கட்டளைக்கு வரும் நிதியை அதிகரிக்க, 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை செலுத்துவோருக்கு திருமலையில் வி.ஐ.பி., பிரேக் தரிசன அனுமதி வழங்கப்படுகிறது.
ஏராளமான பக்தர்கள் அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், அறக்கட்டளைக்கு பணம் வசூலித்துக் கொண்டு பக்தர்களை தேவஸ்தானம் ஏமாற்றுகிறது என, சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த அறக்கட்டளையில் தற்போது வரை, 860 கோடி ரூபாய் நன்கொடை பெறப்பட்டுள்ளது.
இந்த நிதியை கொண்டு தேவஸ்தானம், நாடு முழுதும், 2,445 இடங்களில் ஏழுமலையானுக்கு கோவில் கட்டி வருகிறது.
பின் தங்கிய மக்கள் வாழும் பகுதி மற்றும் மீனவக் கிராமங்களில் அமைந்துள்ள கோவில்களில் தினமும் விளக்கெரியவும், பூஜைகள் நடத்தவும் மாதந்தோறும் 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
தேவஸ்தானம் மீது அவதுாறு பரப்புபவோர், தங்கள் ஆடிட்டருடன் வந்து ஸ்ரீவாணி அறக்கட்டளை நிர்வாகத்தை ஆய்வு செய்யலாம்.
கடந்த, 50 ஆண்டுகளாக தேவஸ்தான நிர்வாகத்தில் எந்த ஊழலும் நடக்கவில்லை. அதற்கான சான்றுகளும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்