வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பல்கலைகளில் ஹோலி பண்டிகை கொண்டாட, அந்நாட்டு உயர் கல்வி கமிஷன் தடை விதித்து உள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் உள்ள குவாய்த் – இ – அசாம் பல்கலை மாணவர்கள், கடந்த 12ம் தேதி பல்கலை வளாகத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடினர். இதற்கு, பல்கலையைச் சேர்ந்த மெஹ்ரான் மாணவர்கள் கவுன்சில் என்ற அரசியல்சாரா கலாசார அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
மாணவர்கள் வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் துாவி உற்சாகமாக ஹோலி கொண்டாடிய, ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள பல்கலைகளில் ஹோலி கொண்டாட, அந்நாட்டு உயர் கல்வி கமிஷன் தடை உத்தரவு பிறப்பித்தது.
இது போன்ற நடவடிக்கைகள், நாட்டின் சமூக – கலாசார மதிப்பீடுகளை முற்றிலுமாக துண்டிப்பதுடன், இஸ்லாமிய அடையாளத்தை சிதைப்பதாகவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement