வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: உலகில் வாழக்கூடிய நகரங்கள் தொடர்பான பட்டியலில் ஆஸ்திரியாவின் வியன்னா நகரம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் பெங்களூரு, ஆமதாபாத், சென்னை, புதுடில்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
‛தி எகானமிஸ்ட்’ நிறுவனத்தின் இணை நிறுவனமான ‛எகானமிஸ்ட் இண்டலிஜென்ஸ் யூனிட்’ என்ற நிறுவனம் உலகில் வாழக்கூடிய நகரங்கள் பட்டியலை தயாரித்துள்ளது. சுகாதார வசதி, கல்வி, ஸ்திரத்தன்மை, உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் 2022ம் ஆண்டு முதல் பட்டியல் தயாரித்து வருகிறது. 2023ம் ஆண்டில், தயாரிக்கப்பட்ட பட்டியலில் 173 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் வியன்னா முதலிடத்திலும், டென்மார்க்கின் கோபன்ஹகென் 2வது இடத்திலும் உள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் சிட்னி 3 மற்றும் 4வது இடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் கனடாவின் கல்கரி, வான்கூவர் மற்றும் டொரன்டோ ஆகிய நகரங்கள் உள்ளன.
வான்கூவர் 5வது இடத்தில் உள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜூரிச் 6வது இடத்திலும் ஜெனிவா 7 வது இடத்திலும் உள்ளன. 10வது இடத்தில் ஜப்பானின் ஒசாகா நகரம் உள்ளது.
இந்த பட்டியலில் நியூசிலாந்தின் வெல்லிங்டன் 23வது இடத்திற்கும், ஆக்லாந்து 25வது இடத்திற்கும் முன்னேறி உள்ளது.
பிரிட்டனின் லண்டன் மற்றும் சுவீடனின் ஸ்டாக்ஹோம் 46 மற்றும் 43வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளன.
ஸ்காட்லாந்து எடின்பார்க் 58 வது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் பெங்களூரு, ஆமதாபாத், சென்னை, புதுடில்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இவை , பட்டியலில் 60வது இடத்திறகு மேல் உள்ளன.
இந்த பட்டியலின் கடைசி மூன்று இடங்களில் அல்ஜீரியாவின் அல்ஜைர்ஸ், லிபியாவின் டிரிபோலி, சிரியாவின் டமாஸ்கஸ் ஆகிய நகரங்கள் உள்ளன. இந்த பட்டியலின் 163வது இடத்தில் உக்ரைனின் கீவ் நகரம் உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement