சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்ததாகக் கூறி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், கைது குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் செந்தில் பாலாஜி மனைவி […]