தென்னிந்திய சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர் ரசிகைகள் என பலரும் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய்யின் மக்கள் மன்ற நிர்வாகிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது பேசிய அவர் அகில இந்திய விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், ரசிகர்கள், ரசிகைகள் என அனைவரின் சார்பாகவும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறினார்.
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் மசூதிகளில் சிறப்பு துவாக்கள் செய்யப்பட்டதாக கூறினார். மேலும் அன்னதானம் மற்றும் ரத்த தானம் செய்யப்பட்டதாகவும் கூறிய இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டதாகவும் புஸ்ஸி ஆனந்த் கூறினார்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாகவும், கனடா மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாக கூறினார்.
மேலும் நாள்தோறும் விலையில்லா விருந்தகம் மாவட்டம் தோறும் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தஞ்சை அரசு மருத்துவமனையில் மதிய உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். விஜய் தற்போது படப்பிடிப்பில் பங்கேற்றிருப்பதாக கூறிய புஸ்ஸி ஆனந்திடம் திருமாளவன், நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழகத்தின் சாபக்கேடு என விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் எதுவும் சொல்லாமல் சிரித்தப்படியே அங்கிருந்து கிளம்பினார் புஸ்ஸி ஆனந்த். மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த புஸ்ஸி ஆனந்த், அந்த நிகழ்வு மக்களிடம் சிறப்பாக சென்று சேந்துள்ளது என்றார் 12 மணி நேரம் நடிகர் விஜய் நின்றப்படியே இந்த நிகழ்ச்சியை நடத்தியதில் அவக்கு மகிழ்ச்சி தான் என்றார். தொடர்ந்து நடிகர் விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்த புஸ்ஸி ஆனந்த் சாரி தலைவா என்று கூறிவிட்டு புறப்பட்டார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
, நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழகத்தின் சாபக்கேடு விமர்சித்திருந்தார். மார்க்கெட் இழந்த நடிகர்கள் உடனே அரசியலுக்கு வந்து முதல்வராகி விடலாம் என நினைக்கிறார்கள் என்றும் சரமாரியாக விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.