வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டனில் ஜெனரல் எலக்ட்ரிக் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவர் எச்.லாரன்ஸ் கல்ப் ஜூனியரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இச்சந்திப்பின்போது இந்திய போர் விமானங்களுக்கான இன்ஜின்களை தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
பன்னாட்டு நிறுவனமான ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ‘ஜி.இ – எப்.414’ (GE-F414) ஜெட் இன்ஜின்களை இந்தியா அதிக அளவில் வாங்கவும், இந்தியாவில் ஜெட் இன்ஜின்களை தயாரிக்கவும் இந்தியா முயற்சித்து வந்தது.
இந்த நிலையில் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்துக்கும், இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்.ஏ.எல்) நிறுவனத்துக்கும் இடையே இன்று மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தால் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் தனது ‘ஜி.இ – எப்.414’ வகை இன்ஜினை இந்தியாவில் தயாரிக்க முடியும்.
இது இந்தியாவின் விமானப் படைக்கு ஒரு மைல் கல்லாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனையடுத்து, ஜெட் இன்ஜின் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் வாய்ந்த அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர வாய்ப்புள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement