கடந்த சில நாட்களாகவே மாரி செல்வராஜ் குறித்த பேச்சுக்கள் தான் சோஷியல் மீடியா முழுக்க வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இவரது இயக்கத்தில் தற்போது ‘மாமன்னன்’ படம் உருவாகியுள்ளது. இந்தப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில்
கமல்
முன்பாக மாரி செல்வராஜ் ‘தேவர் மகன்’ படத்தை விமர்சித்து பேசியது தான் இணையத்தில் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் ‘மாமன்னன்’ படம் உருவாகியுள்ளது. அண்மையில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு கமல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவ்விழாவில் பேசிய மாரி செல்வராஜ், ‘தேவர் மகன்’ பார்த்த பிறகு உருவானது தான் ‘மாமன்னன்’.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அந்தப்படத்தை பார்த்த போது ஏற்பட்ட வலி, பாசிட்டிவ், நெகட்டிவ், அதிர்வுகள் எல்லாமே சேர்ந்து என்னால் அந்த நாட்களை கடக்க முடியாமல் பண்ணியது. சினிமாவா பார்த்த ஒரு படம். ஒரு சமூகத்தை எப்படி புரட்டி போடுது. என்னலாம் பண்ணுது. பாசிட்டிவ் நெகட்டிவா எப்படி மாறுது. சரியா தப்பான்னு தெரியாம திணறிட்டு இருந்தேன்.
‘தேவர் மகன்’ தமிழ் சினிமாவின் மாஸ்டர் ஸ்டோக். எனக்குள் மிகப்பெரிய மனப்பிறழ்வை இந்தப்படம் ஏற்படுத்தியது. சரியா தப்பான்னு தெரியாம மனதில் அப்படி ஒரு வலி. தேவர் மகன் உலகத்துள்ள பெரிய தேவர் இருக்காரு. சின்னத்தேவர் இருக்காரு. இதுக்குள்ள எங்கப்பா இருந்தா எப்படி இருப்பாருன்னு யோசிச்சு உருவான படம் தான் ‘மாமன்னன்’. என் அப்பாவுக்காக பண்ண படம்.
Thangalaan: ‘தங்கலான்’ படத்திற்காக ஐந்து மணி நேரம்.. மாளவிகா மோகனன் கூறிய ஆச்சரியத் தகவல்.!
தேவர் மகன் படத்தில் வடிவேலு சார் பண்ண இசக்கி தான் ‘மாமன்னன்’. அந்த இசக்கி மாமன்னன்னா மாறுனா எப்படி இருக்கும் என்பது தான் ‘மாமன்னன்’ படம் என பேசினார். கமல் முன்னிலையிலே ‘தேவர் மகன்’ படத்தை மாரி செல்வராஜ் விமர்சித்துள்ளது சோஷியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனை வைத்து பல விவாதங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் ‘மாமன்னன்’ படம் தொடர்பான நேர்காணல் ஒன்றில் பேசிய
உதயநிதி ஸ்டாலின்
, படப்பிடிப்பு தளத்துல மாரி செல்வராஜ் தான் ரொம்ப டென்ஷனா இருப்பாரு. அசிஸ்டண்ட் டைரக்டர்கள் எல்லாரையும் போட்டு அடிப்பாரு. கன்னாபின்னான்னு கத்துவாரு. ஒரு போர்க்களமா இருக்கும் என அவர் கூற, அருகிலிருந்த வடிவேலு ஆமாம் என சொல்கிறார். இந்த வீடியோவை தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக்கி மாரி செல்வராஜை விளாசி வருகின்றனர் நெட்டிசன்கள்.
Leo: லோகேஷ் சொன்னது முழுக்க முழுக்க உண்மை: ‘லியோ’ பற்றி கன்பார்மான விஷயம்.!