2023 ஹோண்டா யூனிகார்ன் 160 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள் – Honda Unicorn bike specs and on-road Price

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் 160cc சந்தையில் குடும்பத்திற்கு ஏற்ற மாடலாக விளங்குகின்ற 2023 யூனிகார்ன் 160 பைக் என்ஜின், மைலேஜ், நிறங்கள், அம்சங்கள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

2023 Honda Unicorn

முந்தைய மாடலில் பெரிய தோற்ற மாற்றங்கள் இல்லாமல் விற்பனைக்கு வந்துள்ள யூனிகார்ன் 160 பைக்கில் நேர்த்தியான வடிவமைப்பினை கொண்டதாக மட்டும் வந்துள்ளது. புதிய BS6 இரண்டாம் கட்ட மாசு உமிழ்வுக்கு இணையான OBD2 மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்றதாக தயாரிக்கப்பட்டுள்ள HET (Honda Eco Technology) நுட்பத்தினை பெற்று 162.71cc என்ஜின் அதிகபட்சமாக 7,500rpm-ல் 12.73 bhp பவர், 14 NM டார்க் ஆனது 5500rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கபட்டுள்ளது.

டைமன்ட் டைப் ஃபிரேம் கொண்டுள்ள யூனிகார்ன் 160 பைக் மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை பெற்றுள்ளது. இந்த பைக்கின் பரிமாணங்கள் நீளம் 2081 மிமீ, அகலம் 756 மிமீ மற்றும் உயரம் 1103 மிமீ கொண்டுள்ளது. இதன் வீல்பேஸ் 1335 மிமீ பெற்று 187 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்றதாக உள்ளது.

இருக்கை நீளம் 715 மிமீ மற்றும் 13 லிட்டர் எரிபொருள் கொள்ளளவு பெற்று, 140 கிலோ எடை கொண்டது. முன்பக்கத்தில் 240 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பெற்றுள்ளது ஹோண்டா யூனிகார்ன் 160 பைக் ஒற்றை சேனல் ஏபிஎஸ் கொண்டதாக மட்டும் வருகிறது.

டீயூப்லெஸ் டயர் கொண்டுள்ள பைக்கில் முன்புறத்தில் 80/100-18 M/C47P மற்றும் பின்புறத்தில் 100/90-18 M/C56P டயர் உள்ளது. தற்பொழுது யூனிகான் 160 மாடல் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் , இம்பீரியல் ரெட் மெட்டாலிக், சைரன் ப்ளூ மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கின்றது.

ஹோண்டா யூனிகார்ன் 160 பைக் தமிழ்நாட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை

Unicorn160 OBD2 Rs.1,08,400

(All Price Ex-Showroom Tamil Nadu)

unicorn

ஹோண்டா யூனிகார்ன் 160 நுட்பவிரங்கள்

என்ஜின்
வகை ஏர் கூல்டு, 4 stroke
Bore & Stroke 57.300 X 63.096 mm
Displacement (cc) 162.71 cc
Compression ratio 10.0:1
அதிகபட்ச பவர் 12.73 hp (9.9 kW) at 7,500 rpm
அதிகபட்ச டார்க் 14.58 Nm  at 5,500 rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (PGM-FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் டைமன்ட் டைப்
டிரான்ஸ்மிஷன் 5 ஸ்பீடு
கிளட்ச் வெட் மல்டி பிளேட்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக்
பின்பக்கம் மோனோ ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம் டிஸ்க் 240 mm (with ABS)
பின்புறம் டிரம் 130 mm
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர் 80/100-18 M/C 47P ட்யூப்லெஸ்
பின்புற டயர் 100/90-18 M/C 56P ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V,4.0Ah MF பேட்டரி
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப் & கிக்
பரிமாணங்கள்
நீளம் 2081 mm
அகலம் 756 mm
உயரம் 1103 mm
வீல்பேஸ் 1335 mm
இருக்கை உயரம் 798 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 187 mm
எரிபொருள் கொள்ளளவு 13 litres
எடை (Kerb) 139 kg

ஹோண்டா யூனிகார்ன் நிறங்கள்

2023 Honda unicorn on-Road Price Tamil Nadu

2023 ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கின் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

Unicorn160 OBD2 Rs.1,29,940

(All Price On-road Tamil Nadu)

Honda Unicorn 160 OBD2 – Rs.1,30,560 (All Price on-road Pondicherry)

honda unicorn price

Honda Unicorn 160 Rivals

நேரடியான போட்டியாளர்கள் ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கிற்கு இல்லையென்றாலும் மற்ற 160cc மாடல்களை ஹோண்டா எக்ஸ்-பிளேடு, எக்ஸ்ட்ரீம் 160ஆர், பல்சர் என்எஸ் 160, அப்பாச்சி 160 ஆகியவை உள்ளது.

Faq ஹோண்டா யூனிகார்ன் 160

2023 ஹோண்டா யூனிகார்ன் 160 என்ஜின் விபரம் ?

HET பெற்று 162.71cc என்ஜின் அதிகபட்சமாக 7,500rpm-ல் 12.73 bhp பவர், 14 NM டார்க் ஆனது 5500rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

2023 ஹோண்டா யூனிகார்ன் பைக்கின் ஆன்-ரோடு விலை ?

2023 ஹோண்டா யூனிகார்ன் 160 பைக் விலை ₹ 1,29,940 (on-Road Price in TamilNadu)

ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கின் மைலேஜ் விபரம் ?

2023 ஹோண்டா யூனிகார்ன் 160 மைலேஜ் 50 Kmpl வரை கிடைக்கும்.

2023 Honda Unicorn 160 Bike Image Gallery

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.