ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
தற்போது விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் நா ரெடி பாடலுக்கு தான் வைப் ஆகி வருகின்றனர். அந்த அளவிற்கு இப்பாடல் வெறித்தனமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் பிறந்தநாளான இன்று இப்பாடல் வெளியாவதாக படக்குழு சில நாட்களுக்கு முன்பே அறிவித்தது.
இதையடுத்து நேற்று இப்பாடலின் ப்ரோமோ வீடீயோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை தயார் படுத்தியது. இந்நிலையில் இன்று இப்பாடல் சில நிமிடங்களுக்கு முன்பு வெளியாகி யூடியூபில் சாதனை படைக்க துவங்கியுள்ளது. லோகேஷின் உதவி இயக்குனரான விஷ்ணு என்பவர் இப்பாடலை எழுதியுள்ளார்.
வெளியான நா ரெடி
இவர் ஏற்கனவே விக்ரம் படத்தில் இடம்பெற்ற நாயகன் மீண்டும் வரார் என்ற பாடலை எழுதி பிரபலமானார். இதைத்தொடர்ந்து இப்பாடலையும் விஜய்க்கு ஏற்ற மாஸான வரிகளை போட்டு எழுதியுள்ளார் விஷ்ணு. மேலும் இப்பாடலில் சிறப்பம்சம் விஜய்யே இப்பாடலை பாடியுள்ளது தான்.
தர லோக்கலான இப்பாடலை விஜய்யே பாடியுள்ளது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. 2000 நடன கலைஞர்களை வைத்து மிகப்பிரமாண்டமான முறையில் இப்பாடல் வெறும் ஏழே நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 8 கோடிவரை இப்பாடலுக்கு மட்டும் தயாரிப்பாளர் செலவளித்துள்ளார். அந்த அளவிற்கு இப்பாடல் படத்தில் முக்கியமானதாக கருதப்படுகின்றது.
இந்நிலையில் இப்பாடல் படத்தின் பிளாஷ்பாக் போர்ஷன் துவங்கும் போது வரும் என்றும், இப்பாடலில் சஞ்சய் தத், மன்சூர் அலி கான், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடனமாடியுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றது. இதையடுத்து இந்த பாடலின் மூலமே லோகேஷ் லியோ படத்தின் கதைக்கருவை சொல்லியுள்ளார் என ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
டீகோட் செய்யும் ரசிகர்கள்
விஜய் லியோ படத்தில் பார்த்திபன் மற்றும் லியோ என் இரு கெட்டப்பில் நடிக்கின்றார் என்றும், தான் யார் என்பதை மறைத்து விஜய் காஷ்மீரில் சாக்லேட் பேக்டரி நடித்து வருவது போன்றும் கதையம்சம் கொண்ட படமாக லியோ உருவாகி வருவதாக ரசிகர்களே கணித்து வருகின்றனர்.
மேலும் விக்ரம் மற்றும் கைதி படங்களை போல இப்படமும் போதைப்பொருள் தொடர்புடைய படமாக இருக்கும் என்றும் இப்பாடலை பார்த்த பின்னர் ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். எனவே லியோ கண்டிப்பாக LCU படமாகத்தான் இருக்கும் என்பது ரசிகர்களின் கணிப்பாக இருக்கின்றது.