கடந்த 2002 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான ‘சாமுராய்’ படத்தில் நடித்தன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரேயா ரெட்டி. விஷாலின் ‘திமிரு’ படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் இவர். இந்நிலையில் நடிகை ஸ்ரேயா ரெட்டி செய்துள்ள காரியம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
விஷால் நடித்து வெளியான ‘திமிரு’ படத்தில் வில்லியாக நடித்து கவனம் ஈர்த்தவர் ஸ்ரேயா ரெட்டி. இந்தப்படத்தில் இவரின் மிரட்டலான நடிப்பு இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். தொடர்ந்து வெயில், காஞ்சிவரம் போன்ற படங்களில் நடித்துள்ளார் ஸ்ரேயா ரெட்டி.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு விஷாலின் சகோதரர் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். விஷாலின் தோரணை, வெடி ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார் ஸ்ரேயா ரெட்டி. இவரது நடிப்பில் ‘அண்டாவ காணோம்’ என்ற படம் உருவாகி ரிலீசுக்கு தயாராகவுள்ளது.
Maamannan: உதவியாளர்களை அடிப்பாரா மாரி செல்வராஜ்.?: இணையத்தில் வெடித்த சர்ச்சை.!
மேலும் பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் ‘சலார்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஸ்ரேயா ரெட்டி. இந்நிலையில் அந்தப்படத்தில் தன்னுடன் பணியாற்றிய உதவியாளர்களுக்கு தங்க நாணயங்களை பரிசாக வழங்கியுள்ளார் ஸ்ரேயா ரெட்டி. இதனால் அவரது உதவியாளர்கள் இன்பதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கேஜிஎப் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார் பிரசாந்த் நீல். பிரபாஸ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம் பிலிம்ஸ் இந்தப்படத்தையும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. ‘சலார்’ படம் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
என்னை மிதிச்சவனை நான் மிதிச்சேன்.. டைவர்ஸ் போட்டோஷுட் சர்ச்சை: சீரியல் நடிகை அதிரடி.!