வடமாராட்சி கிழக்கு, அம்பன், குடத்தனை, நாகர் கோயில் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுப்படுத்தும் வகையில் அம்பன் வெள்ளச் சமவெளி எனப்படும் நீர்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திலாப்பியா மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் மீன்பிடிப் பிரிவின் நிதி ஒதுக்கீட்டில் சுமார் இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் திலாப்பியா குஞ்சுகள் குறித்த நீர்நிலையில் விடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக இன்று 75,000 குஞ்சுகள் இடப்பட்டுள்ளன.
அதேவேளை, கடற்றொழில் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மேலும் 700,000 மீன் குஞ்சுகளை குறித்த நீர் நிலையில் இடுவதற்கான ஆலோசனைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.
இதன்மூலம், அம்பன் வெள்ளச் சமவெளி நீர் நிலையை வாழ்வாதாரமாகக் கொண்ட சுமார் 200 குடும்பங்கள் இவ்வருடம் நன்மையடையவுள்ளன.
கடற்றொழில் சார்ந்த மக்களின் வாழ்வாதாரத்தினை மேலும் வலுப்படுத்துவதற்கு நீர்வேளாண்மை விருத்தி தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூடிய அவதானம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.