எக்ஸ் 440 பைக்கின் டீசர் வீடியோவை வெளியிட்ட ஹார்லி-டேவிட்சன்

ராயல் என்ஃபீல்டிற்கு சவால் விடுக்கும் ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கின் முதலூ டீசர் வீடியோ வெளியிடப்பட்டு எக்ஸ்ஹாஸ்ட் சத்தம் இதன் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. மிக நேர்த்தியான ரெட்ரோ ஸ்டைலை பெற்றதாக அமைந்துள்ளது.

எக்ஸ் 440 பைக்கில் 440cc சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் 40 bhp பவர் மற்றும் 35 Nm டார்க் வெளிப்படுத்தலாம்.இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் கிளட்ச் அசிஸ்ட் இடம்பெற்றிருக்கலாம்.

ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ஹோண்டா சிபி350, ஜாவா பைக்குகள் மற்றும் வரவிருக்கும் பஜாஜ்-ட்ரையம்ப் பைக்குகள் ஆகியவற்றுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தும் வகையில் ஹீரோ மற்றும் ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு சவால் விடுக்கும் வகையில் எக்ஸ் 440 வரவுள்ளது.

முன்பக்கத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர் பெறுகிறது. இதில் ப்ரீ-லோடு அட்ஜெட்மென்ட் கொண்டதாகும். முன்புறத்தில் 18 அங்குல சக்கரம் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல வீல் பெற்று டிஸ்க் பிரேக்குடன் இரட்டை சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கிறோம்.

டவீட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ மூலம் எக்ஸ்ஹாஸ்ட் நோட் வெளியாகியுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.