ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
நா ரெடிஇன்று ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படக்குழு ரசிகர்களுக்கு செம ட்ரீட் ஒன்றை கொடுத்துள்ளது. லியோ படத்தில் இடம்பெற்ற நா ரெடி என்ற பாடலை விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிட இருக்கின்றது. மேலும் இப்பாடலை விஜய்யே பாடியுள்ளது கூடுதல் சிறப்பாக இருக்கின்றது. அனிருத்தின் இசையில் விஜய் பாடியுள்ள இப்பாடலை லோகேஷின் உதவி இயக்குனர் விஷ்ணு என்பவர் எழுதியுள்ளார். இந்நிலையில் இப்பாடல் செம குத்து பாடலாக இருக்கும் என்றும், இப்பாடலில் விஜய்யுடன் அர்ஜுன் ,மன்சூர் அலி கான் ,மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடனமாடி இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன
போஸ்டர்நா ரெடி பாடலை விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடுவதாக அறிவித்த படக்குழு லியோ படத்தின் போஸ்ட்டரையும் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தான் தற்போது இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது. ஏற்கனவே நா ரெடி பாடல் வெளியீட்டை ஒரு போஸ்டரின் மூலம் வெளியிட்ட படக்குழு தற்போது மேலும் ஒரு போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த இரண்டு போஸ்டரும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளதால் தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தில் இருக்கின்றது. இதைத்தொடர்ந்து இன்று மாலை மேலும் ஒரு போஸ்ட்டரை படக்குழு வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது
டபுள் ட்ரீட்விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படக்குழு தாராளமாக அப்டேட்டை வழங்கி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. நா ரெடி பாடலை வெளியிடும் லியோ படக்குழு படத்தில் இருந்து செம மாஸான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டை வழங்கியுள்ளது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படக்குழு போஸ்டரோ அல்லது கிலிம்ப்ஸ் வீடீயோவையோ வெளியிடும் என்றுதான் பலரும் எண்ணியிருந்தனர். ஆனால் தற்போது விஜய்யே பாடிய நா ரெடி என்ற பாடலை படக்குழு வெளியிட்டது மட்டுமல்லாமல் மாஸான ஒரு போஸ்ட்டரையும் வெளியிட்டு விஜய் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.
லியோ ஆடியோ லான்ச்இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பங்கேற்ற லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் லியோ படத்தை பற்றியும் விஜய்யை பற்றியும் பல விஷயங்களை பேசியுள்ளார். மேலும் அவர் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடைபெறும் எனவும் பேசியுள்ளார். அதன்படி இன்னும் இரு வாரங்களில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது மற்றும் எங்கு நடக்கும் என்பது பற்றிய தகவலை வெளியிடுவோம் என கூறியுள்ளார் லலித். இந்நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் அக்டோபர் முதல் வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் அந்த விழாவில் விஜய்யின் பேச்சை கேட்க ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது