India to become worlds 3rd largest economy: Modi speech at US Barley | உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்: அமெரிக்க பார்லி.,யில் பிரதமர் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: ‘உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக, விரைவில் இந்தியா மாறும்’ என அமெரிக்க பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசினார்.

latest tamil news

அமெரிக்காவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், அதிபர் ஜோ பைடனை நேற்று சந்தித்தார். அப்போது, ராணுவம், பாதுகாப்பு, விண்வெளி உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து, பிரதமர் மோடி – அதிபர் பைடன் விவாதித்தனர்.

இதையடுத்து பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்ற பிரதமர் மோடி வந்தார். எம்.பி.க்கள் கரகோஷம் எழுப்பி மோடியை வரவேற்றனர்.

latest tamil news

எம்.பி.க்களின் வரவேற்பை ஏற்று பிரதமர் மோடி பேசியது, ‘140 கோடி இந்தியர்கள் சார்பாக இந்த அவையில் பேச வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய கவுரவம். அதுவும் இந்த அவையில் இரண்டாவது முறையாக உரையாற்றுவது எனக்கு பெருமை. இந்திய- அமெரிக்க மரபணுவில் ஜனநாயகம் உள்ளது. ஜனநாயகம் மக்களை ஒருங்கிணைக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், அமெரிக்காவிலும், இந்தியாவிலும் இன்னும் முக்கியமான வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவர நம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் 2,500 அரசியல் கட்சிகளில், பல்வேறு மாநிலங்களில் 20 வெவ்வேறு கட்சிகள் ஆட்சி செய்கின்றன. 22 அதிகாரப்பூர்வ மொழிகள், ஆயிரக்கணக்கான கிளை மொழிகள் உள்ளன.. தற்போது பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. விரைவில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வரும்’ என்றார்.

பிரதமரிடம் ஆட்டோகிராப் பெற்ற அமெரிக்க எம்.பிக்கள்

அமெரிக்க பார்லி.,யில் பேசி முடித்த பினனர் புறப்பட தயாரான பிரதமர் மோடியிடம், அமெரிக்க எம்.பி.,க்கள் அவரை சுற்றி சூழ்ந்து கொண்டு ஆட்டோ கிராப் பெற்றனர். பிரதமரும் பொறுமையாக சளைக்காமல் அவர்களுக்கு ஆட்டோகிராப் இட்டார். சபாநாயகர் கெவின் மெக்காதேவும் விடவில்லை. அவரும் பிரதமரிடம் ஆட்டோகிராப் வாங்கினார். மேலும் பலர் பிரதமர் மோடியுடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.