வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: பிரதமர் மோடிக்கு, வெள்ளை மாளிகையில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. இதில், சத்யா நாதெள்ளா, சுந்தர் பிச்சை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்த விருந்தில் கலந்து கொண்டனர்.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, பல முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிலையில், அமெரிக்க பார்லி.,யில் இன்று இரண்டாவது முறையாக சிறப்புரை ஆற்றினார். அவரிடம் அமெரிக்க எம்.பி.,க்கள் பலரும், ஆட்டோகிராப் வாங்கியும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். இதனை தொடர்ந்து, வெள்ளை மாளிகையில், பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. இதற்காக வெள்ளை மாளிகைக்கு வந்த பிரதமர் மோடியை, அமெரிக்க அதிபர் பைடன், முதல் பெண்மணி ஜில் பைடன் இருவரும் வாசலுக்கு வந்து வரவேற்றனர்.
இந்த விருந்து நிகழ்ச்சியில், அமெரிக்காவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, தனது மனைவி நீட்டாவுடன் இவ்விருந்தில் கலந்து கொண்டார். கூகுள் சிஇஓ., சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் சிஇஓ., சத்யா நாதெள்ளா, பெப்சிகோ முன்னாள் சிஇஓ., இந்திரா நூயி, மகேந்திரா குழும தலைவர் ஆனந்த் மகேந்திரா, அடோப் தலைவர் சாந்தனு நாராயண் உள்ளிட்ட பலரும் பிரதமர் மோடிக்கு பைடன் அளிக்கும் இரவு விருந்தில் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement