2,500 political parties in India: Modi speaks in America | இந்தியாவில் 2,500 அரசியல் கட்சிகள்: அமெரிக்காவில் மோடி பேசுகையில் சிரிப்பலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: இந்தியாவில் 2,500 அரசியல் கட்சிகள் உள்ளன. மேலும் 20 வேறுபட்ட அரசியல் கட்சிகள் வெவ்வேறு மாநிலங்களை ஆளுகின்றன. ஆனால் தேசம் என்பது ஒன்றே, வேற்றுமையில் ஒற்றுமை என்றார்.

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பார்லி.,யில் உரையாற்றினார். இந்த அவையில் பேசுவது 140 கோடி மக்களுக்கு அளித்த கவுரவம். இந்தியாவில் 2,500 அரசியல் கட்சிகள் உள்ளன. (அவையில் ஆச்சரிய சிரிப்பலை ) . ( பிரதமர் மோடியும் சிரித்து கொண்டார். ) 20 வேறுபட்ட அரசியல் கட்சிகள் பல்வேறு மாநிலங்களை ஆளுகின்றன. இந்தியாவில் 22 மொழிகள் உள்ளன. ஆனால் அனைவரும் தேச பற்று என்பதில் ஒரே குரலில் பேசி வருகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை இந்தியா.

100 மைல் தொலைவில் எங்கு சென்றாலும் தோசை, ஆலுபுரோட்டா, சிக்கன், என அனைவரும் அனைத்தையும் ருசித்து வருகின்றனர். டிஜிட்டல் பெமென்ட் அபரிதமாக வளர்ந்துள்ளது. தெருவோர கடைகள் வரை போன்பே செய்கின்றனர். இந்தியாவில் சோலார் சக்தி உற்பத்தி 2 ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.