டைட்டன் நீர்மூழ்கி கப்பல் என்ன ஆனது? அமெரிக்க கடலோர காவல்படை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

வடக்கு அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை காண 5 பேர் கொண்ட குழு ஓஷன் கேட் நிறுவனத்தின் டைட்டன் என்ற நீர்மூழ்கி கப்பலில் கடந்த ஞாயிற்றுக் கிழமை பயணத்தை தொடங்கினர். நீர் மூழ்கி கப்பலில் இருந்த பைலட் ஸ்டாக்டன் ரஷ், பிரிட்டன் தொழிலதிபரான 58 வயது ஹமிஷ் ஹார்டிங், பாகிஸ்தான் தொழிலதிபரான் 48 ஷாஷாதா, அவரது 19 வயது மகன் சுலேமான் தாவூத், டைட்டானிக் கப்பல் பற்றி ஆய்வு செய்து வரும் பிரான்ஸ் நாட்டின் கடற்படை வீரர் பால் ஹென்றி நர்ஜோலெட் ஆகியோர்தான் இந்த பயணத்தில் இருந்தனர்.

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
இந்நிலையில் டைட்டன் நீர்மூழ்கி கப்பல் தனது பயணத்தை தொடங்கிய 2 மணி நேரத்தில் கடலுக்கு மேற்பரப்பில் இருந்த அனைத்து தொடர்புகளையும் இழந்தது. இதையடுத்து டைட்டன் கப்பலை தேடும் பணியை முடுக்கி விட்டது அமெரிக்க கடலோர காவல்படை. கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் நடைபெற்று வந்த இந்த தேடுதல் பணியில், கனேடிய விமானங்கள், அமெரிக்க கடலோர காவல் படையின் கப்பல்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன.

96 மணிநேரம் முடிந்தது.. மாயமான டைட்டன் நீர்மூழ்கி கப்பல்… கலங்கிப்போன கஸ்தூரி!

கடலில் கேட்கும் சத்தங்களை கண்டறியும் வகையில் சோனார் மிதவைகள் மற்றும் ரோபோட்டுகளும் இந்த தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் 96 மணி நேரத்திற்கு மட்டுமே ஆக்ஸிஜன் இருந்ததால் அதற்குள் நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடித்தாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

நேற்று மாலையுடன் 96 மணி நேரம் நிறைவடைந்த நிலையில் நீர்மூழ்கி கப்பலில் இருந்தவர்களின் கதி என்ன ஆனது என்ற அச்சம் ஏற்பட்டது. இந்நிலையில் அமெரிக்க கடலோர காவல்படை இன்று அதிகாலை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி டைட்டன் நீர்மூழ்கி கப்பல் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்துச் சிதறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாந்தனு மனைவியா இது… மாடர்ன் லுக்கில் மிரட்டும் கிகி.. தீயாய் இருக்கும் போட்டோஸ்!

அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாகவும் அமெரிக்க கடலோர காவல் படை அறிவித்துள்ளது. மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ரோபோட்டுகள் நீர்மூழ்கி கப்பலின் உடைந்த பாகங்களை கண்டுபிடித்து உள்ளதாகவும், அவை ஓஷன் கேட் நீர்மூழ்கி கப்பலுடையதுதான் என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் இதுவரை மனித எச்சங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், உடல்களை கண்டுப்பிடித்து கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெறும் என்றும் அமெரிக்க கடலோர காவல் படை அறிவித்துள்ளது. ஓஷன் கேட் நிறுவனமும் அறிக்கை மூலம் இதனை உறுதி செய்துள்ளது. அமெரிக்க கடலோர காவல்படையின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி கூட்ட நெரிசலில் இனி தவிக்க வேண்டாம்… பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.