ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 125cc சந்தையில், சூப்பர் ஸ்பிளெண்டர், கிளாமர் என இரு மாடல்களின் என்ஜின், சிறப்புகள், மைலேஜ் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
125cc சந்தையில் உள்ள ஹோண்டா ஷைன் 125, எஸ்பி 125, பஜாஜ் ஆட்டோ பல்சர் 125, பல்சர் என்எஸ் 125 மற்றும் CT 125X, டிவிஎஸ் ரைடர் 125 ஆகிய மாடல்களுடன் நேரடியாக சந்தையை பகிர்ந்து கொள்ளுகின்றது.
2023 Hero Super Splendor
ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் மற்றும் சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் பைக்கில் 124.7cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 10.72 bhp பவர் 10.6 Nm டார்க் வழங்குகின்றது. இந்த பைக்கில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட டைமண்ட் ஃபிரேம் சேஸ் கொடுக்கப்பட்டு 18 இன்ச் வீல் கொடுக்கப்பட்டுள்ள சூப்பர் ஸ்ப்ளெண்டர் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் டூயல் ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது.
ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் விலை ரூ 82,838 முதல் ரூ.86,838 (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)
சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் வேரியண்டில் எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் கிளஸ்ட்டர் உடன் கூடிய ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதி மூலம் கால், எஸ்எம்எஸ் அலர்ட், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதிகளை கொண்டிருக்கின்றது.
ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் விலை ரூ 85,068 முதல் ரூ.89,068 (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)
Hero Super Splendor | |
Engine Displacement (CC) | 124.7 cc Air-cooled |
Power | 10.72 hp @ 7500 rpm |
Torque | 10.6 Nm @ 6000 rpm |
Gear Box | 5 Speed |
2023 ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் மற்றும் சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை
SUPER SPLENDOR DRUM ₹ 97,531
SUPER SPLENDOR DISC ₹ 1,02,987
SUPER SPLENDOR XTEC DRUM – ₹ 99,605
SUPER SPLENDOR XTEC DISC – ₹ 1,04,112
2023 Hero Glamour 125
ஹீரோ கிளாமர் 125 பைக்கில் கிளாமர் கேன்வாஸ், கிளாமர் எக்ஸ்டெக் மற்றும் கிளாமர் என மூன்று விதமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 124.7cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 10.72 bhp பவர் 10.6 Nm டார்க் வழங்குகின்றது. இந்த பைக்கில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது.
கிளாமர் எக்ஸ்டெக் மாடல் எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் கிளஸ்ட்டர் உடன் கூடிய ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதி மூலம் கால், எஸ்எம்எஸ் அலர்ட், நேவிகேஷன் வசதி, யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதிகளை கொண்டிருக்கின்றது.
பொதுவாக மூன்று மாடல்களும் பாடி கிராபிக்ஸ் உட்பட பல்வேறு சிறிய அளவிலான ஸ்டைலிங் மாற்றங்கள் மட்டும் கொண்டுள்ளது. கிளாமர் மற்றும் கிளாமர் கேன்வாஸ் பைக்குகளுக்கு இடையிலான விலை வித்தியாசம் வெறும் ரூ.270 மட்டுமே ஆகும்.
Hero Glamour 125 | |
Engine Displacement (CC) | 124.7 cc Air-cooled |
Power | 10.72 hp @ 7500 rpm |
Torque | 10.6 Nm @ 6000 rpm |
Gear Box | 5 Speed |
2023 ஹீரோ கிளாமர் மற்றும் கிளாமர் எக்ஸ்டெக் பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை
GLAMOUR/ Glamour Canvas DRUM BRAKE ₹ 97202
GLAMOUR/Glamour Canvas DISC BRAKE ₹ 1,01,702
GLAMOUR XTEC DRUM BRAKE ₹ 1,04,860
GLAMOUR XTEC DISC BRAKE ₹ 1,09,078
(All prices On-road Tamilnadu)